புசாகர் மாநிலம்

பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானம் From Wikipedia, the free encyclopedia

புசாகர் மாநிலம்
Remove ads

புசாகர் (Bushahr), 'பசாகர்' என்றும் 'புசாகிர்' அல்லது 'புசைர்' என்றும் உச்சரிக்கப்படும் இது பிரித்தானிய ஆட்சியின் போது இந்தியாவில் இராஜபுத்திர சுதேச சமஸ்தானமாக இருந்தது. இது குடியேற்ற பஞ்சாப் பகுதியின் வடக்குப் பகுதியில் திபெத்தின் எல்லையில் மலைப்பாங்கான மேற்கு இமயமலைப் பகுதியில் அமைந்திருந்தது.

விரைவான உண்மைகள்

இந்த முன்னாள் மாநிலத்தின் பிரதேசம் இப்போது தற்போதைய இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது. முந்தைய புசாகர் மாநிலத்தில் சத்லஜ் ஆறு நதி கடந்து சென்றது. இது மேற்கில் குல்லு, லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாநிலங்களாலும், கிழக்கில் கார்வாலாலும் எல்லையாக சூழப்பட்டிருந்தது. இது 8,907 பரப்பளவைக் கொண்டிருந்தது.

Remove ads

வரலாறு

Thumb
புசாகர் மாநிலத்தின் வரைபடம், 1911
Thumb
கிழக்கு பஞ்சாபின் 1863-ஆம் ஆண்டு வரைபடத்தில் புசாகர் மற்றும் கார்வால் பகுதி மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

முந்தைய புசாகர் மாநிலம் 1803 முதல் 1815 வரை மத்திய நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்கா மன்னரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பஞ்சாப் பகுதியின் சீக்கிய அரசின் ஆட்சியாளரான இரஞ்சித் சிங் 1809-இல் தலையிட்டு நேபாள இராணுவத்தை சத்லஜ் ஆற்றின் கிழக்கே விரட்டினார். நேபாளத்தின் எல்லையில் உள்ள சிறு மாநிலங்களை இணைப்பதில் நேபாளத்திற்கும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டி இறுதியில் ஆங்கிலேய-நேபாளப் போர் (1815-16) அல்லது கூர்க்கா போருக்கு வழிவகுத்தது. இறுதியில் இரு படைகளும் சுகௌலி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அதைத் தொடர்ந்து புசாகரின் தலைநகரான கம்ருவிலிருந்து கூர்க்காக்கள் வெளியேற்றப்பட்டனர்.

1898 இல், பிரிட்டிசு நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் மன்னர் பெயரளவில் பொறுப்பில் இருந்தார். பிரிட்டிசார் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, மாநிலம் 28 சிம்லா மலை மாநிலங்களில் மிகப் பெரியதாக இருந்தது.[1] 1906-இல் இப்பகுதியில் விவசாயிகளால் வரிக் கிளர்ச்சி ஏற்பட்டது.

மாநிலத் தலைவர்கள்

முந்தைய புசாகர் மாநிலத்தின் ஆட்சியாளர்களின் அசல் இருக்கை கின்னௌரில் உள்ள சாங்லாவில் பாஸ்பா ஆற்றங்கரையில் உள்ள கம்ரு கிராமத்தில் உள்ள கம்ரு கோட்டையில் இருந்தது. கோட்டை தற்போது கைவிடப்பட்டுள்ளது. காமாக்யா தேவியின் (காமாட்சி தேவி) சிலை உள்ளது, இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கௌகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆட்சியாளர்கள் பின்னர் சரகானுக்கு குடிபெயர்ந்தனர். சரகானில் உள்ள "மன்னனின் அரண்மனை" மன்னன் பதம் சிங்கின் உத்தரவின்படி செப்டம்பர் 1917 இல் அவர் தங்குவதற்காக கட்டப்பட்டது. "மாநிலத்தின் மன்னனின்" தற்போதைய குடியிருப்பு சிம்லா மாவட்டத்தில் உள்ள இராம்பூரில் உள்ள பதம் அரண்மனையில் உள்ளது. இராம்பூர் நகரம் 17 ஆம் நூற்றாண்டில் மன்னன் கெக்ரி சிங்கால் அல்லது 18 ஆம் நூற்றாண்டில் மன்னன் இராம் சிங்கால் நிறுவப்பட்டிருக்கலாம். ஆட்சியாளர்கள் தங்கள் பாரம்பரிய இருக்கையான சரகானில் இருந்து சத்லஜ் ஆறு ஆற்றங்கரைக்கு நகர்ந்தனர். இது புசைர் மலைகளில் உள்ள செல்வந்த சமஸ்தானங்களில் ஒன்றாகும். மேலும், திபெத்து, கின்னௌர் மற்றும் கீழ் பகுதிகளுக்கு இடையே வர்த்தகத்திற்கான முக்கிய மையமாகவும் இருந்தது.

புசாகரின் ஆட்சியாளர் பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பு பெற்ற சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களை வரவேற்கும் போது துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கச் செய்து வழங்கப்படும் மரியாதை பெற்ற சுதேச ஆட்சியாளராக இருந்தார். ஆனால் 1947 இல் சுதந்திரம் அடையும் வரை "மாண்புமிகு" பாணியில் அவருக்கு உரிமை இல்லை.

Remove ads

ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள் ராணா என்றும் பின்னர் ராஜா என்ற பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னர் வைத்துக் கொண்டனர். [2] [3]

இதனனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads