சிம்லா மாவட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சிம்லா மாவட்டம்map
Remove ads

சிம்லா மாவட்டம் இமாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சிம்லா நகரம் ஆகும். இது மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களை வடக்கிலும் கின்னௌர் மாவட்டத்தை கிழக்கிலும் கொண்டுள்ளது. தெற்கில் உத்தரகண்ட் மாநிலமும் மேற்கில் சிர்மௌர் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் (984 அடி) லிருந்து6,000 மீட்டர்கள் (19,685 அடி)வரை உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் காங்ரா மற்றும் மண்டி மாவட்டங்களுக்கு பிறகு சிம்லா மாவட்டம் மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3] இந்த மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவர். இந்தி மற்றும் பஹாரி மொழிகள் இங்குள்ள மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே தங்கள் வருமானத்திற்கு சார்ந்துள்ளனர்.

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads