புஞ்சைப் புளியம்பட்டி

இது தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia

Remove ads

புஞ்சைப் புளியம்பட்டி (ஆங்கிலம்:Punjaipuliampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்நகரம் கோயம்புத்தூருக்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஈரோட்டிற்கு மேற்கே 83 கி.மீ. தொலைவில் உள்ளது. புஞ்சைபுளியம்பட்டியை தலைமையிடமாக்கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,480 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 25,000 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1673 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,870 மற்றும் 7 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.04%, இசுலாமியர்கள் 7.66%, கிறித்தவர்கள் 2.14% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]

Remove ads

சிறப்புகள்

இங்குள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில்கள் புகழ் பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று பெருமாள் ஊர்வலம் நடைபெற்று திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஊரில் காாந்திநகர் பகுதியில் உள்ள பட்டத்தரசியம்மன் புகழ் பெற்றது, குறிப்பாக அருந்ததியர் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகள் பட்டத்தரசியம்மன் செல்வநாயகி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் இடம் பெறுகிறது. காந்திநகர் பகுதி அருள்மிகு மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா ஈரோடு மாவட்ட மக்களின் தனி கவனம் பெற்ற புகழுடையது. சித்திரை திரு விழா அனைத்து அம்மன் கோவில்களிலும் மழைவேண்டி சிறப்பாக வழிபாடு பூச்சாட்டுதல் என்ற நிகழ்வுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவில் வீர செங்குந்தர்கள் உடலில் கொக்கிகளிட்டு அம்மன் தேரை ஊர்வலமாக இழுத்து வருவது மிகப்பெரும் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மைசூரிலிருந்து திப்பு சுல்தான் இந்த ஊரின் வழியாக தனது படைகளுடன் கடந்து சென்றதால், அந்த பாதை திப்பு சுல்தான் சாலையென்றழைக்கப்படுகிறது. இந்த ஊரின் அருகில் சுற்றுலாத்தலமான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற ஓதிமலை முருகன் கோவில், கொடிவேரி அணை ஆகியவை அமைந்துள்ளது. இந்த நகரம் பெங்களூருவிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் செல்லும் நெடுஞ்சாலை எண் 948ல் (NH 209) அமைந்துள்ளது. இந்த ஊரின் அருகில் பண்ணாரி என்னுமிடத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மழைவேண்டி அக்கினி குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெரும். இதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

இவ்வூரை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஏ.சாமிநாதன் முதலியார் தமிழக அளவில் புகழ்பெற்ற அரசியல்வாதி [4]

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads