கிரிப்டான்

From Wikipedia, the free encyclopedia

கிரிப்டான்
Remove ads

கிரிப்டான் (Krypton) என்பது Kr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமத்தின் அணு எண் 36 ஆகும். மந்த வளிமங்கள் என அழைக்கப்படும் 18 ஆவது தொகுதி தனிமங்களில் இத்தனிமமும் ஓர் உறுப்பினராகக் கருதப்படுகிறது. புவியின் வளிமண்டலத்தில் கிரிப்டான் மிகமிகச் சிறிதளவே உள்ளது. நிறமில்லாத, சுவையில்லாத, மணமில்லாத ஒரு வளிமமாக இது காணப்படுகிறது. பெரும்பாலும் ஒளிர்விளக்குகளில் மற்ற மந்த வாயுக்களுடன் சேர்த்து இதையும் பயன்படுத்துகிறார்கள். விதிவிலக்காக மிகவும் அரிதாக கிரிப்டான் வேதியியல் ரிதியாகவும் ஒரு மந்தவாயுவாகக் கருதப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் பொது, தோற்றம் ...
Remove ads

வரலாறு

Thumb
கிரிப்டானைக் கண்டறிந்த சர் வில்லியம் ராம்சே

1898 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர். காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் இச்செயல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு. நீர்மக் காற்றிலுள்ள அனைத்து பகுதிக்கூறுகளும் ஆவியானபிறகு எஞ்சும் கசடிலிருந்து இவ்வாயுவை இவர்கள் கண்டறிந்தனர். ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இவர்களே இதே செயல்முறை மூலம் நியான் வாயுவையும் கண்டறிந்தனர் [2]. நியான், செனான், கிரிப்டான் உள்ளிட்ட பல மந்த வாயுக்களை கண்டுபிடித்தற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு 1904 ஆம் ஆண்டு வில்லியம் ராம்சேவுக்கு வழங்கப்பட்டது. கிரேக்க மொழியில் நியோசு என்றால் புதியது என்றும் கிரபிடோசு என்றால் மறைந்துள்ளது என்றும், செனான் என்றால் புதியது என்றும் பொருள் ஆகும்.

1960 ஆம் ஆண்டில் நடைபெற்ற எடை மற்றும் அளவீடுகள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கிரிப்டான் -86 ஐசோடோப்பு மூலம் உமிழப்பட்ட 1,650,763.73 அலைநீள ஒளியே மீட்டர் என வரைறை வழங்கப்பட்டது [3][4]. இந்த உடன்படிக்கை பாரிசில் அமைக்கப்பட்ட 1889 சர்வதேச முன்மாதிரி மீட்டரால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. இம்முன் மாதிரி மீட்டர் பிளாட்டினம் இரிடியம் தண்டினால் ஆனதாகும். 1927 ஆம் ஆண்டு வழக்கத்திலிருந்த சிவப்பு காட்மியம் நிறமாலை வரியின் மீதிருந்த ஆங்சுடிராம் அடிப்படையிலான வரையறையையும் 1 Å = 10−10 மீட்டர் என கிரிப்டான் 86 வரையறை இடப்பெயர்ச்சி செய்தது [5]. கிரிப்டான் -86 வரைய்றை 1983 அக்டோபரில் மாநாடு நடைபெறும் வரையில் வழக்கத்தில் இருந்தது. பின்னர் இது 1/299,792,458 அலை நீளங்களில் ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர் என வரையறை செய்யப்பட்டது[6][7][8].

Remove ads

பண்புகள்

பல்வேறு கூர்மையான உமிழ்வு நிறமாலை வரிகளால் கிரிப்டான் அடையாளப்படுத்தப்படுகிறது. பச்சை மற்றும் மஞ்சள் இவற்றில் வலிமையானதாகும்[9]. யுரேனியம் பிளக்கப்படும் போது உருவாகும் விளைபொருள்களில் ஒன்று கிரிப்டானாகும்[10]. திண்மநிலை கிரிப்டான் வெண்மை நிறத்தில் முகமைய்ய கனசதுர படிகக் கட்டமைப்பில் காணப்படுகிறது. ஈலியத்தைத் தவிர மற்ற மந்த வாயுக்கள் அனைத்திருக்கும் இப்பண்பு பொருந்து, அறுகோண மூடியபொதிவு படிகக் கட்டமைப்பை ஈலியம் கொண்டுள்ளது.

மற்ற மந்த வாயுக்கள் போல கிரிப்டானும் ஒளியூட்டலிலும் புகைப்படத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. கிரிப்டான் விளக்கில் பல நிறமாலை வரிகள் காணப்படுகின்றன. கிரிப்டான் அயனி மற்றும் எக்சைமர் சீரொளி போன்ற பிரகாசமான, உயர் ஆற்றல் வாய்ந்த வாயு சீரொளிகளில் கிரிப்டான் பிளாசுமா பயன்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒற்றை நிறமாலை வரியை பிரதிபலிக்கும் மற்றும் அதிகப்படுத்தும். கிரிப்டான் புளோரைடும் ஒரு பயனுள்ள சீரொளியாகப் பயன்படுகிறது. 1960 ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் ஒரு மீட்டர் என்பதன் அதிகாரப்பூர்வ நீளம் கிரிப்டான் -86 ஆரஞ்சு நிறமாலை வரிசையின் 605 நானோ மீட்டர் அலைநீளம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிரிப்டான் இறக்க குழாய்களின் அதிக சக்தி மற்றும் செயல்பாடு இதற்கு காரணமாகும்.

ஐசோடோப்புகள்

பூமியின் வளிமண்டலத்தில் இயற்கையாகத் தோன்றும் கிரிப்டன் நிலைப்புத்தன்மை கொண்ட ஐந்து ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர 9.2×1021 ஆண்டுகள் என்ற நீண்ட அரை ஆயுள் கொண்ட ஒரு ஐசோடோப்பும் (78Kr) நிலைப்புத்தன்மை கொண்டது எனக் கருதும் நிலையில் உள்ளது. இந்த ஐசோடோப்பு நீண்ட அரை ஆயுள் காலம் காணப்பட்ட அனைத்து ஐசோடோப்புகளிலும் இரண்டாவது நீண்ட அரை ஆயுள் கொண்டதாகக் கருதப்படுகிறது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்புச் செயல்முறையின் மூலம் இது 78Se ஆக மாற்றமடைகிறது[11]. இவை நீங்கலாக 30 நிலைப்புத்தன்மை அற்ற ஐசோடோப்புகளும் மாற்றியங்களும் கிரிப்டானுக்கு உண்டு[12]. 81Kr ஐசோடோப்பு இயற்கையாகத் தோன்றுவதுடன், 80Kr ஐசோடோப்பு அண்டக்கதிர்களை உமிழ்வதாலும் உண்டாகிறது. கதிரியக்க ஐசோடோப்பான இதன் அரை ஆயுள் 230000 ஆண்டுகளாகும். கிரிப்டான் எளிதில் ஆவியாகும். கரைசலில் நீண்ட நேரம் இருக்காமல் ஆவியாகும். ஆனால் 81Kr ஐசோடோப்பு 50000 முதல் 800000 ஆண்டுகள் வரையிலான பழமையான நிலத்தடி நீரின் காலக் கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது[13].

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads