புருகுப்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புருகுப்தர் (Purugupta) (சமக்கிருதம்: पुरुगुप्त) (ஆட்சிக் காலம் கி பி 467–473) வட இந்தியாவின் 9-வது குப்தப் பேரரசர் ஆவார். குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் – பேரரசி ஆனந்ததேவி இணையருக்குப் பிறந்த புருகுப்தர், இவரது ஒன்று விட்ட சகோதரர் ஸ்கந்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசின் அரியணை ஏறியவர்.[1]
புருகுப்தரைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் ஏதும் கிடைக்காத போதும், இவரது பேரன் மூன்றாம் குமாரகுப்தர் வெளியிட்ட பிதாரி வெள்ளி நாணயங்கள் மூலமும் மற்றும் நாளந்தாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த, இவரது மகன்களான நரசிம்மகுப்தர், புத்தகுப்தர் மற்றும் மூன்றாம் குமாரகுப்தர் காலத்திய களிமண் முத்திரைகளின் மூலம் புருகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு அறிய முடிகிறது.
சாரநாத்தில் உள்ள புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தருக்குப் பின் இரண்டாம் குமாரகுப்தன் அரியணை ஏறினார் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads