புருவாஸ் அருங்காட்சியகம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில், புருவாஸ் நகரில் அமைந்துள்ள ஓர் அருங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
புருவாஸ் அருங்காட்சியகம் (மலாய்: Muzium Beruas) மலேசியாவின் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில், புருவாஸ் நகரில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். கி.பி.2-ஆம் நூற்றாண்டில் புருவாஸ் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த கங்கா நகரத்தின்[1] அரிய கலைப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
Remove ads
வரலாறு
1991 நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி 1991 டிசம்பர் 25-ஆம் தேதி வரை, மலேசித் தேசிய அருங்காட்சியகம்; பேராக் மாநில அரசு; மற்றும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் சார்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கங்கா நகரம் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார்கள்.[2]
கிராமவாசிகள் கண்டெடுத்த கலைப்பொருட்கள்
புருவாஸ் கிராமவாசிகள் கண்டெடுத்த கலைப்பொருட்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. அத்துடன் பல புதிய வரலாற்று கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதே நேரத்தில் மேலதிக ஆய்வுகளும் அவ்வப்போது மேற்கொள்ளப் பட்டன. அப்போது அந்தத் தருணத்தில் அந்தக் கலைப்பொருட்கள் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.
புருவாஸ் அருங்காட்சியகம் எனும் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அந்த அருங்காட்சியகத்தில் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய அருங்காட்சியகத் துறை கருதியது.[3]
புருவாஸ் நீதிமன்றக் கட்டிடம் புருவாஸ் அருங்காட்சியகமாகப் புதுப்பிக்கப்பட்டது.[4] 6-ஆவது மலேசியா திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திப் புருவாஸ் அருங்காட்சியகத்திற்கு நிதியுதவிகள் செய்யப் பட்டன.
புருவாஸ் அருங்காட்சியகம் திறப்புவிழா
1995 மே 23-ஆம் தேதி, புருவாஸ் அருங்காட்சியகம், தேசிய அருங்காட்சியகத்தின் மலேசிய இயக்குநர் மூலமாகப் பேராக் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
1995 ஜூலை மாதம் பேராக் முதலமைச்சர் டான்ஸ்ரீ ராம்லி நிகா தாலிப், புருவாஸ் அருங்காட்சியகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பின்னர் அந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கும் திறந்து விடப்பட்டது.
ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்னர் புருவாஸ் பகுதிகளில் கோலோச்சிய கங்கா நகரப் பேரரசின் பல்வேறு அரிய பொக்கிஷங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துகின்றன.
கங்கா நகரத்தின் அரிய 300 கலைப்பொருட்கள்
புருவாஸ் அருங்காட்சியகத்தில் கங்கா நகரத்தின் 300 கலைப்பொருட்கள் பாதுகாக்கப் படுகின்றன. தவிர கங்கா நகரத்தைப் பற்றிய விளக்கப் படங்கள் மற்றும் கங்கா நகரத்தின் கடந்த காலத்தைப் பற்றிய குறிப்புகளும் அங்கு உள்ளன. [5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads