பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
Remove ads

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya City Councill); (சுருக்கம்: MBPJ) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது. [2]

விரைவான உண்மைகள் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிPetaling Jaya City CouncilMajlis Bandaraya Petaling Jaya, வகை ...
Thumb
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகப் பகுதிகள்

2006 சூன் 20-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 97 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.

2017-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் 2,335 பேர் பணிபுரிந்தார்கள். இந்த மாநகராட்சியின் 2017-ஆம் ஆண்டு வரவு செலவு MYR 479,488,450 (ஏறக்குறைய 480 மில்லியன் ரிங்கிட்).[3]

Remove ads

பொது

இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.

வரலாறு

Thumb
பெட்டாலிங் ஜெயாவில் சன்வே சிட்டி நகரம்

1950-ஆம் ஆண்டுகளில், பிரித்தானிய மலாயாவின் காலத்தில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் மக்கள்தொகை பெருக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக, கிள்ளான் பழைய சாலைப் பகுதியில் (Old Klang Road) இருந்த எப்பிங்காம் ரப்பர் தோட்டத்தில் (Effingham Estate) 1,200 ஏக்கர் (486 எக்டர்) பரப்பளவில், பெட்டாலிங் ஜெயா நகரம் உருவாக்கப்பட்டது.[4]

பெட்டாலிங் ஜெயா நகரத் திட்டத்தை உருவாக்கியவர் பிரான்சிஸ் மெக் வில்லியம்ஸ் (Francis McWilliams) எனும் பிரித்தானியர் ஆகும்.[5]

1952-ஆம் ஆண்டு தொடங்கி, பெட்டாலிங் ஜெயாவின் மக்கள்தொகை பெரும் வளர்ச்சியைக் கண்டது. பெட்டாலிங் ஜெயாவின் வளர்ச்சி "பழைய நகரம்" என்று அழைக்கப்படும் பழைய பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் (Old Town, Petaling Jaya) பகுதியை மையமாகக் கொண்டு 800 வீடுகளின் கட்டுமானத்துடன் தொடங்கியது.

பெட்டாலிங் ஜெயா உருவாக்கம்

1950-களில் மலாயாவின் பிரித்தானிய உயர் ஆணையராகவும்; பெட்டாலிங் மாவட்ட மன்றத்தின் தலைவராகவும் இருந்த சர் ஜெரால்டு டெம்பிளர் (Sir Gerald Templer); பெட்டாலிங் ஜெயா நகரத்தை உருவாக்க திட்டமிட்டார். அந்தக் கட்டத்தில் மலாயா அவசரகால நிலைமையில் இருந்தது.[4]

கோலாலம்பூர் கிள்ளான் பழைய சாலைப் பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவுவதைத் தடுப்பதற்காக, ஜெரால்டு டெம்பிளர் ஒரு துணை நகரத்தை (Satellite Town) உருவாக்க விரும்பினார். அந்த வகையில் பெட்டாலிங் ஜெயாவில் சில புதுக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் கிராமக் குடியிருப்பு பகுதிகள் முழுமையும் முள் வேலிகளால் பாதுகாக்கப்பட்டன.

பெட்டாலிங் ஜெயா நகர ஆணையம்

பெட்டாலிங் ஜெயா நகரம், 1953-ஆம் ஆண்டின் இறுதி வரையில், கோலாலம்பூர் மாவட்ட அதிகாரியால் நிர்வாகம் செய்யப்பட்டது. பின்னர் 1954-இல், பெட்டாலிங் ஜெயா நகர ஆணையம் (Petaling Jaya Town Authority) உருவாக்கப்பட்டு, என்.ஏ.ஜே. கென்னடி (N.A.J. Kennedy) என்பவர் பெட்டாலிங் ஜெயாவை நிர்வாகம் செய்தார்.

வரலாற்று ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெட்டாலிங் ஜெயா நகரம், கோலாலம்பூரின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டு வந்தது. இருப்பினும், 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டாட்சிப் பிரதேசமாக (Federal Territory) மாறிய போது, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் மாநிலத்திற்குள் ஒரு நகரமாக இணைக்கப் பட்டது.

வளர்ச்சிப் படிகள்

  • பெட்டாலிங் ஜெயா உள்ளூராட்சி (மலாய்: Pihak Berkuasa Tempatan Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya Local Authority); 1954 - 1977;
  • பெட்டாலிங் ஜெயா நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya Municipal Council); 1977 - 2006;
  • பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya City Council); 26.06.2006 தொடங்கி - இன்று வரையில்;

மாநகரத் தலைவர்கள்

Thumb
கோத்தா டாருல் எசான்; பெட்டாலிங் ஜெயா நுழைவாயில்

2006 சூன் 26-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவுக்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதில் இருந்து ஆறு மாநகரத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மாநகரத் தலைவராக முகமட் அசான் அமீர் (Mohamad Azhan Md. Amir) உள்ளார். இவர் 21 அக்டோபர் 2021 முதல் பதவியில் உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணியைச் சேர்ந்த நால்வர் மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads