பெட்லாவாட் வெடிவிபத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்தியப் பிரதேசத்திலுள்ள சாபூவா மாவட்டத்தின் பெட்லாவட் நகரத்தில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் நாள் வெடிவிபத்து நடந்ததில் சுமார் 105 நபர்கள் உயிரிழந்தனர்[1] இவ்விபத்திற்கான காரணமாக, வெடிபொருட்களும், சமையல் எரிவாயுவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.[2][3]
Remove ads
வெடிவிபத்து
காவல்துறையின் அறிக்கையின்படி இரு வேறு விபத்துகள் நடந்துள்ளன. கூட்டம் அதிகமுள்ள உணவகத்திலுள்ள சமையல் எரிவாயு வெடித்ததால் அருகிலிருந்த வெடிப்பொருட்களும் வெடித்தாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.[4] ஆனால் அதன்பிறகு நடந்த விசாரணையில் வெடிவிபத்து முதலில் வெடிபொருட்கள் இருந்த கிடங்கில் நடந்ததாக காவல்துறை நம்புகிறது.[5] வெடிப்பொருட்கள் இருந்த கிடங்கும், உணவகமும் அருகில் இருந்ததால் உணவகம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.[6] இந்த விபத்தால் அருகிலிருந்த கூட்டமிகுந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்தோரும் இறந்துள்ளனர்.[1]
பிணக்கூறு ஆய்வுகளை மாநிலக் காவல்துறை ஆரம்பித்துள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஃகான் இறந்தவர்களுக்காக ₹200,000 காயமைடைந்தவர்களுக்காக ₹50,000 அறிவித்துள்ளார்[7]
இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரணப் முகர்ஜி,[2] முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி ஆகியோர் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.[1]
Remove ads
புலனாய்வு
புலனாய்வின் அடிப்படையில், இராசேந்திர கசவா என்பவர் வெடிவிபத்து நடந்த கிடங்கில் தங்கியிருந்தார் என்பதும், ஜெலினைட் என்னும் வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தார் என்பதும், இவ்வெடிவிபத்திற்குக் காரணமாக இருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சியின் நெருக்கமான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க உறுப்பினரால் இது நடத்தப்பட்டது என குற்றம் சாட்டியபோதும், இறந்தவர்களின் உடல்மீது அரசியல் நடைபெறுகிறது என பாஜக மறுத்துள்ளது.[8] இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ, உட்பிரிவு 3/4 பிரிவின் கீழ் இராசேந்திர கசவா கைது செய்யப்பட்டுள்ளார். இறப்புகள் 1973-ம் ஆண்டின் குற்றப்பிரிவு 174-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[9] காவல்துறை ஆய்வின் போது கசவாவின் வீட்டில் இன்னும் சில ஜெலினைட் குச்சிகளை கண்டறிந்துள்ளனர்.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads