இந்திய தண்டனைச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து வகையான அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் பாக்கிஸ்தான் (இப்போது பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் வங்காளத்தால் ஏற்கப்பட்டு தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூணை போன்ற நாடுகளால் தழுவப்பட்டு , அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்துவருகிறது.
Remove ads
இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மைகளை விடுத்தபின் வந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது. இவ்வரைவு சர் பர்னஸ் பீகாக், கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மற்றும் சக நீதிபதிகளால் மிக கவனமாக திருத்தப்பட்டு அக்டோபர் 6,1860 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகத்தில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது. இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது.
Remove ads
இந்திய தண்டனைச் சட்டம், 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
Remove ads
1. பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகள் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பகுதி எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2,2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கான விளக்கம் கொடுத்தது.இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது. ஆனால் 2013 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை தள்ளி வைத்ததுடன், இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, நீதித்துறையின் பொறுப்பல்ல என்று அறிவித்தது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3.பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒப்புதலுள்ள உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம்(ஆங்கிலத்தில்)
- இந்திய தண்டனைச் சட்டம் பரணிடப்பட்டது 2009-04-19 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads