பெரிங் பாலம்

From Wikipedia, the free encyclopedia

பெரிங் பாலம்
Remove ads

பெரிங் பாலம் (Bering land bridge) சுமார் ஆயிரம் மைல்கள் நீளம் கொண்ட நிலப்பரப்பு. இப்பாலம் (இயற்கை கட்டிய பாலம்) இன்றைய அலாஸ்காவையும் கிழக்கு சைபீரியாவையும் இணைக்கும் பகுதியாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் அதாவது பனிக்காலத்தில் இருந்தது. இப்பகுதி தற்போது பனியால் சூழப்பட்டு பாலம் மூடிக் கிடக்கிறது. காரணம், தொடர்ந்து வரும் பனித்தூறலாலும் பனிசூழ்ந்த அலாஸ்காவிலிருந்து வரும் தென்மேற்குக் காற்றாலும் பாலம் மூடிவிட்டது. மனித இனம் கண்டம் விட்டு கண்டம் நகர்ந்த முதல் நிகழ்ச்சியும் இங்கு நடந்ததுவே. கீழ்க்கண்ட அசை படத்தில் இப்பாலத்தின் காலவரலாறும் அது எப்படி மூடியது என்று தெளிவாகச் சொல்லுகிறது.

Thumb
பெரிங் நிலப்பாலம் குறுகுவதைக் காட்டும் அசை படம்
Thumb
ஆசியாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையில் இருந்த நிலப் பாலத்தின் அமைவு

பனிக்காலத்தில் தப்பிய மனித இனம் இவ்வழியாக அலாஸ்காவில் புகுந்தனர். காலப்போக்கில் பனிசூழ்ந்து இணைப்புப் பாலமாகிய பெரிங் பாலம் காணாமல் போயிற்று, இதைப் போன்றே மாறுதல்கள் உலகின் பல இடங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இதன் கால அளவும் உத்தேசமாகவே குறிக்கப்பட்டுவருகிறது. ஒரு சிலர் முப்பதாயிரம் வருடங்கள் என்றும் சிலர் பன்னிரண்டாயிரம் முதல் முப்பத்தையாயிரம் வரையிலும் என்று குறிப்பிடுகிறார்கள். என்றாலும் பெரிங் இயற்கைப் பாலம் இருந்தது என்னவோ உண்மைதான். மனித இனத்தின் முதல் இடம்பெயர்தலும் இதன் வழிதான் என்று குறிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.[1][2][3]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads