பெரிப்ளசு காட்டும் தமிழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரிப்ளசு (Periplus) என்பது ஒரு கையேட்டு நூல். இந்த வழித்துணைவன் நூலை எழுதிவைத்தவர் ஒரு கிரேக்க மாலுமி. இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றனர். பெரிப்ளசு நூல்கள் பல இருந்தாலும் அவற்றில் செங்கடல் செலவு எனப்படும் எரித்திரியக்கடல் கையேட்டு நூலே (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) தமிழகத்தை பற்றிய குறிப்புகளைத் தருகிறது. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையே உள்ள காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கலாம். இவர் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றை பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் கி.பி. முதல் நூற்றாண்டின் போது இந்தியாவுக்கு வந்தார் என கருதப்படுகிறது. தான் வந்த வழி, கண்ட இடங்கள், அந்த இடங்களுக்கு இடையேயுள்ள தொலைவு, அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் தொழில், பழக்க-வழக்கங்கள், ஊரில் நடந்த வாணிகம், ஊரை ஆண்ட அரசர்கள் போன்றவற்றைத் தன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

அவற்றில் அக்கால இந்தியாவின் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கங்கையாற்றுச் சமவெளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. [1][2] அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. [3]

Remove ads

கடற்பயணப் படம்

Thumb
பெரிப்ளசு கடற்பயணம்

பத்தி 54 [4]

தொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். தொண்டி சேரநாட்டு ஊர். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். [5] தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில், ஆற்றங்கரையில் உள்ளது.

Remove ads

பத்தி 55 [6]

ஆறு கடலோடு கலக்கும் குத்தில் 'பக்கரே' என்னும் ஊர் உள்ளது. இது சங்க இலக்கியங்களில் பந்தர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்சிந்தையிலிருந்து வரும் பொருள்களை ஏற்றுமதி செய்ய பக்கரே துறைமுகத்தில் மரக்கலங்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கும். இத் துறைமுகத்துக்கு வரும் ஆற்றுக் கால்வாய்கள் குப்பைக் கூளங்கள் அடங்கிய சேற்று சேற்று நீரைக் கொண்டு தூய்மையற்றுக் கிடக்கும். இந்த மூன்று சந்தை-நகரங்களின் அரசர்கள் உள்நாட்டுப் பகுதியில் இருந்துகொண்டு அரசாண்டுவந்தனர். அந்த அரசர்களின் ஆட்கள் என்ற முறையில் இந்தத் துறைமுகச் சந்தைகளுக்கு வரும் வெளிநாட்டு வணிகர்களைக் காண வருவர். அவர்கள் நாகர் (serpents) என அழைக்கப்படுபவர்கள். கருநிறத் தோற்றம் கொண்டவர்கள். குள்ளமானவர்கள். (கூளியர்) படமெடுத்தாடும் பாம்பைப் போலப் பம்பைத் தலை உடையவர்கள். இரத்தச் சிவப்பு-நிறக் கண்களை உடையவர்கள்.

பத்தி 56 [7]

அவர்கள் பெரிய கப்பல்களில் நல்ல தரமான மிளகையும், மலைபடு திரவியங்களையும் மிகுதியாக ஏற்றிக்கொண்டு இந்தச் சந்தை நகரங்களுக்கு வருவார்கள். அவை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். மற்றும் நாணயம் [8], இரத்தினக் கற்கள், மெல்லிய துணியாடைகள் (மிகுதியாக அன்று), கலை உருவம் கொண்ட லினன் துணிகள், நீல மணிக் கற்கள், பவளம், நாட்டுக் கண்ணாடி, செம்பு, தகரம், காரீயம், நறவு (அதிகமன்று), செம்படடிகம், செம்படிகம் பதித்த அணிகலன்கள், கடல்-பயணிகளுக்குப் போதுமான கோதுமை ஆகியனவும் உள்-நாட்டு வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்படும். மிளகு கொட்டநரா (குட்டநாடு) மாவட்டத்திலிருந்து அதிகமான அளவில் ஏற்றுமதி செய்வர். இவற்றுடன் மிகமிகத் தரமான முத்து, யானைத் தத்தம், பட்டுத்துணி, கங்கைச் சமவெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணமுள்ள வெட்டிவேர் முதலான மூலிகைகள் [9], உள்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரிஞ்சி-இலை, தெக்காணக் கடலோரமாகக் கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்கள், பல்வகை வைரங்கள், நீலக் கற்கள், கிரைசுத் தீவிலிருந்து (கடம்பத் தீவு)கொண்டுவரப்பட்ட ஆமை ஓடுகள் முதலானவையும் இந்தத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. உகந்த பருவக் காற்று வீசும் சூலை மாதத்தில் எகிப்பிலிருந்து வந்த கப்பல்களில் இவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

தமிழகம் ஏற்றுமதி செய்த பொருள்கள் - படம்

Remove ads

பத்தி 57 [10]

கானா, ஏடமான் அரேபியா நாடுகளிலிருந்து சிறிய படகுக்கப்பல் வழியாக இந்த முழுப் பயணமும் நிகழ்ந்தது. கடற்கரை ஓரமாக நிகழ்ந்தது. ஹிப்பாலஸ் என்னும் கப்பல் மாலுமி துறைமுகங்களைப் பற்றியும், ஆங்காங்குள்ள கடல்களின் தன்மை பற்றியும் அறிந்தவன். அவன் முதலில் பெருங்கடலைக் குறுக்காகக் கடக்கும் வழியைக் கண்டறிந்தான். அப்போது இந்தியாவில் எடீசின் காற்று [11] வீசத் தொடங்கியது. இந்தக் காற்றை மாலுமி ஹிப்பாலஸ் கணித்தறிந்ததால், இந்தக் காற்றுக்கும் 'ஹிப்பாலஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை சிலர் 'கானா'விலிருந்தும், மற்றும் சிலர் 'ஸ்பைஸ்'-முனையிலிருந்தும் புறப்பட்டுக் கடற்பயணம் நடைபெறுகிறது. இந்தக் காற்றின் உதவியால் தமிழக்ம் [12] கப்பல்களின் தலையாகிய பாய்மரங்களை விரிப்பதில்லை. பாரிகாசா, சைத்தியா ஆகிய வளைகுடா நகரங்களை மூன்றே நாட்களில் பருவக் காற்றின் உதவியால் கடற்கரை ஓரமாகச் சென்றடையலாம்.

Remove ads

பத்தி 58 [13]

பாக்கரே (பந்தர்) துறைமுகத்துக்கு அப்பால் கரும்சிவப்பு மலைகள் கூடிய கடற்கரையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி நீண்டு பரலியா மாவட்டம் உள்ளது. அங்குள்ள முதலில் உள்ள ஊர் 'பலிதா'. அங்கே அழகிய துறைமுகமும், கடற்கரையில் சிற்றூரும் உண்டு. அதனையும் தாண்டிச் சென்றால் வரும் ஊர் 'கொமரி' (குமரி). இந்தக் குமரி முனையில் துறைமுகமும் உண்டு. தன் வாழ்நாளின் எஞ்சிய காலத்தைப் புனிதமாக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் இங்கு வந்து நீராடி வாழ்விடமாக்கிக் கொள்வர். இங்குப் பெண்-தெய்வம் உறைவதாகச் சொல்கின்றனர்.

Remove ads

பத்தி 59 [14]

Thumb
'மஸ்லின்' மெல்லாடை

கொமரி என்னும் குமரிக்குத் தெற்கில் பாண்டியப் பெருநாட்டிக்குட்பட்ட 'கொல்சி' (கொற்கை) உள்ளது. இங்கு முத்துக் குளிப்போர் வாழ்கின்றனர். அவர்கள் வெறுத்தொதுக்கப்பட்ட குற்றவாளிகள். கொல்கிக்கு தொடர்ந்து 'கடற்கரை நாடு' என அழைக்கப்படும் ஒரு வளைகுடா மாவட்டம் உள்ளது. அந்த வட்டார நாடு 'அர்காரு' (இராமேஸ்வரம்) என்று அழைக்கப்படுகிறது. இதன் கடற்கரையிலிருந்து வேறு எங்கி்ல்லாத அளவு முத்துகள் வாங்கப்படுகின்றன. இங்கிருந்து 'அர்காரிட்டி' எனப்படும் 'மஸ்லின்' மெல்லாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Remove ads

பத்தி 60 [15]

தமிரிக்காவின் வடக்கிலிருந்து மிக முக்கியமான நாடுகளின் சந்தை நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றில் கப்பல் நிறுத்தப்பட்டது. இங்கு கடற்கரையிலிருந்து தொலைவில் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை முதலில் 'கமரா', அடுத்து 'புதுக்கா' (புகார்), அடுத்து 'சோபட்மா' (எயிற்பட்டினம்) என்பன. 'சங்காரா' என அழைக்கப்பட்ட ஒரே மரத்தாலான மற்றும் நுனியில் கட்டப்பட்ட நீளமான கப்பலை பயன்படுத்தினர். 'கிரிசி', கங்கைவெளி ஆகிய இடங்களுக்குச் பயணம் செய்ய 'கொலந்தியா' (சொழாந்தியம்) என்றழைக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்துப் பொருள்கள் எல்லாமே இந்தச் சந்தைப் பட்டினங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. எகிப்திலிருந்து வந்த பொருள்கள் இறங்கியது இவற்றிற்குத் தனிப் பெருமை. தமிழகப் பொருள்கள் இங்கிருந்து 'பரலியா' என்னும் துறைமுகம்</ref> வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

படத்தில் இடக் குறிப்பிடங்கள்
  • தமிரிகா என்பது சேரநாட்டுக் கடலோரம்
  • புதுக்கா என்பது பாண்டிச்சேரி
  • அருகா என்பது உறையூர்
  • கமரா என்பது காலப்பட்டினம்
  • நெல்சிந்தா என்பது மேலைக்கடல் துறைமுகம்
  • நவ்ரா என்பது கண்ணனூர்
Remove ads

மேலும் காண்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads