பெரியபாபுசமுத்திரம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் அழகிய கிராமம். From Wikipedia, the free encyclopedia

பெரியபாபுசமுத்திரம்map
Remove ads

பெரியபாபுசமுத்திரம் (Periyababusamudram அல்லது Periyababusamuthiram) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[2][3][4] இக்கிராமம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[5] இந்த ஊராட்சி பாண்டிச்சேரி மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமம், கிராம ஊராட்சி வகையை சேர்ந்தது ஆகும்.

விரைவான உண்மைகள் பெரியபாபுசமுத்திரம் Periyababusamudram, நாடு ...
Remove ads

மக்கள் தொகை

இக்கிராமத்தில் வன்னிய குல சத்திரிய (வன்னிய கவுண்டர்) சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர்கள், நாயுடுகள், குயவர்கள் மற்றும் வண்ணார்கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர்.

மேலதிகத் தகவல்கள் மதவாரியான கணக்கீடு ...
Remove ads

போக்குவரத்து

Thumb
வானூர் சாலை மற்றும் ஊரின் நுழைவாயில்

இக்கிராமத்திலிருந்து புதுச்சேரி கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 21 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கண்டமங்கலம் நகரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் செல்கின்றன. இக்கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு பேருந்துகள் செல்கின்றது.

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இக்கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


Thumb
சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம்

சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன.[6]

இக்கிராமத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி விமான நிலையம் ஆகும். இது இங்கிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் அருகிலுள்ள பெரிய விமான நிலையம், 143 கி.மீ தொலைவில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகும் மற்றும் 192 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அடுத்த மிக அருகில் உள்ள பெரிய விமான நிலையம் ஆகும்.

Remove ads

பொருளாதாரம்

Thumb
பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் நெல் பயிரிடும் காட்சி

இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, உளுந்து, மலாட்டை, மரவள்ளி போன்றவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சிலர் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.

கோயில்கள்

Thumb
பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற புளியம்பட்டு மாரியம்மன் ஆலயம்
Thumb
புளியம்பட்டு மாரியம்மன்
Thumb
திரௌபதி அம்மன் கோயில்
Thumb
திரௌபதி அம்மன் ஆலயம்
  • புளியம்பட்டு மாரியம்மன் கோயில்
  • பெரியாண்டவர் சன்னதி
  • ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில்
  • திரௌபதி அம்மன் கோயில்
  • பிள்ளையார் கோயில்
  • பெருமாள் கோயில்
  • அய்யனார் கோயில்

இக்கிராமத்தில் சுமார் 80 அடி உயர தேர் உள்ளது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுகிறது.

Remove ads

தெருக்கள்

  • ஆலஞ்சாலை
  • தேரடிதெரு
  • பிள்ளையார் கோயில் தெரு
  • அண்ணா நகர்
  • அய்யனார் கோயில் தெரு
  • வானூர் ரோடு
  • குயவர் தெரு
  • பாரதி வீதி
  • குறுக்கு தெரு
  • ஏரிக்கரை தெரு
  • பெரியாபாபுசமுத்திரம் காலனி

அருகிலுள்ள நகரங்கள்

வசதிகள்

Thumb
அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியபாபுசமுத்திரம்
  • அரசு உயர்நிலைப்பள்ளி
  • அங்கன்வாடி மையம்
  • துணை சுகாதார நிலையம்
  • கிராம நிர்வாக அலுவலகம்
  • ஊராட்சி மன்ற அலுவலகம்
  • நியாயவிலை கடை
  • நூலகம்
  • அஞ்சலகம்

முக்கிய அரசியல் கட்சிகள்

இக்கிராமத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்;

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads