பெரியமேடு

From Wikipedia, the free encyclopedia

பெரியமேடுmap
Remove ads

பெரியமேடு[1][2][3][4][5] என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரசு மாநகராட்சி அலுவலகமான பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ளடக்கிய 'ரிப்பன் கட்டடம்' (109 ஆண்டுகள் பழைமை வாய்ந்த),[6] எழில்மிகு தோற்றத்துடன் பெரியமேடு ஈ. வெ. ரா. நெடுஞ்சாலையில் வீற்றிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த, 'புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்'[7] பெரியமேட்டிலேயே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பெரியமேடு, நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெரியமேடு புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 13°04'58.4"N, 80°15'57.6"E (அதாவது, 13.0829°N, 80.2660°E) ஆகும்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

பெரியமேடு, சாலை வசதிகளால் சென்னை மாவட்டம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களுக்கும் சென்று வர மிக எளிதாக இணைக்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பெருநகர மாநகரப் பேருந்துகள் இவ்வழியாக சென்று வருகின்றன.

தொடருந்து போக்குவரத்து

பெரியமேட்டில் அமைந்துள்ள சென்னை மத்திய தொடருந்து நிலையம், இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்குச் சென்று வரும் வகையில் இருப்புப்பாதை வழித்தடங்களால் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் சென்னை மத்திய மெட்ரோ நிலையம் சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வர எளிதாக அமைந்துள்ளது. பெரியமேட்டிற்கு அருகிலுள்ள சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், தமிழ்நாட்டின் தென்பகுதிகளுடன் இருப்புப்பாதை வழித்தடங்களால் இணைக்கப்பட்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து

இங்கிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலுள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வியாபாரிகள் நேரடித் தொடர்புக்கும் வழிவகுக்கிறது.

Remove ads

வர்த்தகம்

ஆடு, மாடு, எருமை மற்றும் மிருகங்களின் தோல் பதனிடும் தொழில்கள் பெரியமேட்டில் நடைபெறுகின்றன. மேலும், இங்கு காலணிகள், கைப்பைகள், இடுப்புக் கச்சைகள், பணப் பைகள் போன்றவையும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

விளையாட்டு

சுமார் 40,000 இருக்கை வசதிகளுடன் கூடிய ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை), பெரியமேட்டிலேயே அமைந்து, உலக விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடமாக பெருமை பெற்றுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

இந்துக் கோயில்கள்

இங்குள்ள பிரபலமான கோயில்களில் சில: பெரியமேடு கோதண்டராமசுவாமி பஜனை கோயில், வரசித்தி விநாயகர் கோயில், எல்லம்மன் கோயில்.

மசூதி

முசுலிம்கள் அதிகமாக வாழும் பெரியமேட்டில், அவர்களின் தொழுகைக்காக பெரியமேடு மசூதி ஒன்றும் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads