பெரியபட்டினம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

பெரியபட்டினம்map
Remove ads

பெரிய‌ப‌ட்டின‌ம் (Periyapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

வ‌ர‌லாறு

Thumb
மார்க்கோ போலோ

இராமநாதபுரம் நகருக்கு தென்கிழக்கே இருப‌து கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதூதா, மார்க்கோ போலோ போன்றவர்கள் வந்திறங்கிய வர‌லாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திக‌ழ்ந்துள்ள‌து.

பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம் [3] [4] என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும்,பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால் டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும்[5] இன்று பெரிய‌ப‌ட்டின‌ம் என்றும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு க‌ட‌ல்தொழில் முக்கிய‌த்தொழிலாக‌ இருக்கிற‌து.

பெரியப்பட்டினம் பெரும்பாலும் தென்னிந்தியாவின் ஆரம்பகால "யூத" நகரங்களில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது.[6] பெரியப்பட்டினம் கடற்கரையில் முதலில் அமைந்துள்ள ஒரு அரிய யூத கல்வெட்டு (1200-1250 A D), 2022 இல் வளந்தரவையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[7]

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[8] [9]

மேலதிகத் தகவல்கள் மாநிலம் பெயர்: தமிழ்நாடு (33), மாவட்ட பெயர்: ராமநாதபுரம் (626) ...

குடும்பங்களின் எண்ணிக்கை  : 1777

மேலதிகத் தகவல்கள் ஜனத்தொகை, நபர் ...
Remove ads

கல்வி

பெரியபட்டினம் மேல்நிலை பள்ளி. இதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை கல்வி வசதிகள் உள்ள பள்ளி ஒன்றாகும். இளைஞர்கள் இப்போதெல்லாம் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்குச் சென்று கல்வி கற்கிறார்கள்.

பிரபலமான பள்ளிகள் சில

பிரபலமான கல்லூரி சில

  • தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி (பெண்கள்) - கீழக்கரை
  • முகமது சதக் பொறியியல் கல்லூரி - கீழக்கரை
  • முகமது சதக் பாலிடெக்னி கல்லூரி - கீழக்கரை
  • செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கீழக்கரை
  • செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இராமநாதபுரம்
  • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி - இராமநாதபுரம்
  • கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முத்துப்பேட்டை

சிறப்புகள்

வெற்றிலை (Betel)

Thumb
பெரியபட்டினம் வெற்றிலை (Betel)

இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எங்கள் ஊர் வெற்றிலை (Betel) தான் சிறந்தது. மாவட்டத்திலேயே அதிகமாக பயிர்செய்யபடுகிறதும் இங்குதான். பெரியபட்டினம் வெற்றிலை என்றால் நல்ல இளம் பச்சை நிறைத்தில் குறைந்த காரமுடன் நல்லா சிவக்கும் தன்மை கொண்டது. இங்கு பயிர்செய்யபடும் வெற்றிலை இதற மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். “கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை””இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை” என்று சொல்வார்கள். ஆண்டாண்டு காலமாக பயிரிட்டு வந்த ”வெற்றிலை கொடிக்கால்” முன்பு மாதிரி இப்பொழுது இல்லை தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் பற்றாக்குறை எல்லாரும் வெளிநாட்டு மோகமூம், பண்ணை நிலங்கள் வீட்டுநிலமாகவும் மாறியதால் சிறிது அளவே பயிர்செய்யப்படுகிறது.

Remove ads

விளையாட்டு

பெரியபட்டினம் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் கபடி. இராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிக பெரிய கிரிக்கெட் மைதானம் இங்குதான் உள்ளது. இங்கு மாவட்ட கிரிக்கெட் லீக் மற்றும் கால்பந்து போட்டிகளில் பல நடத்தியிருந்தது. இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணியில் பிரபலமானவர்கள்

உணவு

பெரியபட்டினம் மக்கள் நடைமுறையில் உணவு பழக்கம் இலங்கை தமிழ் முஸ்லீம் உணவு மற்றும் மலாய் உணவு ஒற்றுமைகள் இருக்கின்றன. உதாரணமாக ஆப்பம், இடியாப்பம், வட்டலப்பம் [10], போன்ற உணவுகள். பெரியபட்டினம் மக்கள் உணவு நடைமுறையில் பெரும்பாலான கடற்கரை பகுதிகளில் வாழும் கடல் சார்பை பின்பற்றியே இருக்கின்றனர்.

  • மீன் குழம்பு (Fish Curry)[11]
  • கருவாட்டு குழம்பு (Dryfish Curry) [12]
  • தேங்காப் பால் ரசம் (Coconut Milk Rasam)[13]
  • இறால் (Prawns)[14]
  • நண்டு (Crab) [15]
Remove ads

பஸ் வழித்தடங்கள்

பஸ் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இலக்கு புள்ளி அல்லது 60 நிமிடங்களில் அதிகபட்சமாக சென்றடையும் ........

Thumb
பெரியபட்டினம் பஸ் வழித்தடங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - TNSTC ( 4,4A,4B,4C,4D,4E,4F )
மேலதிகத் தகவல்கள் பேருந்து எண், பஸ் வகை ...
*ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் காலை 4:15 மணி முதல் இரவு 9:45 மணி வரை கிடைக்கும்,.
    • கூடுதலாக,, அரசு பஸ் (SETC) ஒரு பயணம் உள்ளது இராமநாதபுரம் முதல் சென்னை. வரை பஸ் வருகை பெரியபட்டினம் சரியாக மாலை 5:00 மணிமுதல் 5:30 வரை.
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads