பெரிய கொக்கு
ஒரு வகை கொக்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிய கொக்கு (Great Egret) இப்பறவை வெப்ப வலயம் மற்றும் மிதவெப்பமண்டலம் பகுதிகளில் காணப்படும் கொக்கு வகையைச் சார்ந்த பறவையாகும்.[2]

பெரும் வெண் கொக்கு என்றும் அழைக்கப்படும் இப்பறவை உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் தெற்கு ஐரோப்பா பகுதிகளிலும் காணப்படுகிறது. வடக்கு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனாலும் இவை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் பறவை இனம் ஆகும். பழைய காலத்திலிருந்தே இந்த கொக்கு இனம் வாழ்ந்தாலும் இதனை கரிபியா பகுதியில் காணப்படும் கொக்குடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறார்கள்.
Remove ads
விளக்கம்
இதன் உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது.[3] இதன் எடை 1,000 கிராம் அளவு கொண்டுள்ளது. நீல நிறக்கொக்கை விட சிறியதாகக் காணப்படுகிறது. இவை பறக்கும்போது தனது கழுத்தை ஓர் விமானம்போல் நீட்டி மெதுவாக வானத்தில் பறந்து செல்லும்.[4]
Remove ads
படத்தொகுப்பு
- கொக்கின் முட்டை
- ஆண் கொக்கு
- சினைப்பருவத்தின் கொக்கின் தோற்றம்
- குஞ்சுகளுடன் தாய்பறவை
- பறந்து செல்லுகிறது
உணவுப்பழக்கம்
இவை நீர் நிலைகளில் காணப்படும் சிறிய பூச்சிவகைகள், தவளை, மீன், மற்றும் பாலூட்டிகள் போன்றவற்றை உட்கொள்கிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads