பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு

இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார்.[1][2] 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.
1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார்.
Remove ads
குறிப்புகள்
- இக்கட்டுரையில் உள்ள அனைத்து நாட்களும் ஆன் வாழ்ந்த நாட்களில் பெரிய பிரித்தானியாவில் பின்பற்றப்பட்ட பழைய பாணி யூலியன் நாட்காட்டியை ஒட்டியது; ஒரே விலக்கு இங்கிலாந்தின் புத்தாண்டுத் துவக்கமான 25 மார்ச்சுக்கு மாற்றாக ஆண்டுகள் 1 சனவரியில் துவங்குவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads