பெரும்பல்வகைமை நாடுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரும்பல்வகைமை நாடுகள் (megadiverse countries) புவியின் பெரும்பான்மை இனங்களைக் கொண்டுள்ள, மிகவும் உயிரியற் பல்வகைமை உடையனவாக கருதப்படும் நாடுகளின் குழுமமாகும். பன்னாட்டுப் பேணல் அமைப்பு 1998இல் 17 நாடுகளை பெரும்பல்வகைமை நாடுகளாக அறிவித்துள்ளது.[1][2] இந்த நாடுகள் அனைத்துமே முழுமையாகவோ பகுதியாகவோ வெப்ப வலயம் அல்லது அயன அயல் மண்டலம் பகுதிகளில் அமைந்துள்ளன.
2002இல், மெக்சிக்கோ தன்னைப் போன்ற பெரும்பல்வகைமை நாடுகளை குவியப்படுத்தும் ஓர் தனி அமைப்பை நிறுவியது. இது பன்னாட்டுப் பேணல் அமைப்பு அறிவித்த அனைத்து பெரும்பல்வகைமை நாடுகளையும் உள்ளடக்கவில்லை; தன்னுடன் ஒத்த கொள்கைகள் உடைய, உயிரியற் பல்வகைமை கொண்டதும் தொடர்பான மரபார்ந்த அறிவு/பட்டறிவு கொண்ட நாடுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டது.[3]
17 பெரும்பல்வகைமை நாடுகளாவன:[1]
Remove ads
கான்குன் முனைப்பு மற்றும் ஒத்த கருத்துடைய பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமம் அறிவிப்பு
பெப்ரவரி 18, 2002இல் பிரேசில், சீன மக்கள் குடியரசு, கொலொம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, மெக்சிக்கோ, பெரு, பிலிப்பீன்சு, தென்னாப்பிரிக்கா மற்றும் வெனிசுவேலாவின் சுற்றுசூழல் அமைச்சர்களும் பேராளர்களும் மெக்சிக்கோவின் கான்குன் நகரில் கூடினர். இந்த நாடுகள் ஒத்த கருத்துடை பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமம் என்ற அமைப்பை நிறுவின; உயிரியற் பல்வகைமைப் பேணலையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் முன்னுரிமைகள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான தொடர்பாடலையும் கூட்டுறைவையும் வளர்க்க இவ்வமைப்பு ஓர் கருவியாக இருக்குமென கருதினர். மேலும் இவை உயிரியற் பல்வகைமை மரபு, உயிரிப்பாதுகாப்பிற்கான கார்டாக்னா நெறிமுறை, மற்றும் வானிலை மாற்றத்திற்கான கியோட்டோ நெறிமுறை ஆகியவற்றில் கையொப்பமிடாத நாடுகளை இவற்றின் உறுப்பினராக வலியுறுத்தவும் முடிவு செய்தனர்.[4]
ஒத்த கருத்துடை பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளாவன:[5]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads