பெற்ற மனம்
ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெற்ற மனம் 1960 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் நேசனல் பிக்சர்சு நிறுவனத்தினர் இதனைத் தயாரித்திருந்தனர்.[1] சிவாஜி கணேசன், புஷ்பவல்லி, எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[2] இது 1953 இல் வெளிவந்த பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.
Remove ads
நடிப்பு
தயாரிப்பு
பெற்ற மனம் திரைப்படத்தின் கதையை மு. வரதராசன் எழுதினார். நடனங்களை கே. என். தண்டாயுதபாணி, பிள்ளை தங்கப்பன், முத்துசாமிப் பிள்ளை ஆகியோர் அமைத்திருந்தனர்.[2] பெற்ற மனமும், பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும்,[3] தெலுங்குத் திரைப்படம் 1953 இலேயே வெளியிடப்பட்டு விட்டது. ஏழாண்டுகளின் பின்னரேயே தமிழ்த் திரைப்படம் வெளியானது.[2]
பாடல்கள்
எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்த பாடல்களை,[4][5] கு. மு. அண்ணல்தங்கோ, எம். கே. ஆத்மநாதன், பாரதிதாசன், கண்ணதாசன், கே. பி. காமாட்சிசுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், சி. எஸ். ஜெயராமன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, கே. ஜமுனா ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[6]
வெளியீடு
பெற்ற மனம் 1960 அக்டோபர் 19 இல் வெளியிடப்பட்டது.[7] வணிக அளவில் இது தோல்வி கண்டது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads