பாரதிதாசன்

கவிஞர், திராவிட இயக்க அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

பாரதிதாசன்
Remove ads

பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார். குயில் என்னும் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்கிற பெயரைச் சூட்டிக் கொண்டார். பாரதிதாசன், அவரது எழுச்சி மிக்க எழுத்துகளுக்காக, "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் பாரதிதாசன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

Thumb

பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில், பெரிய வணிகராயிருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

பாரதிதாசன் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே கூடுதலானது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் அறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசு, அவரை அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக நியமித்தது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார் [2]. மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் [2][3][4]. அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். 1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

Remove ads

பாரதியார் மீது பற்று

பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் பாரதிதாசனுக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரைப் பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்கு முன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமலேயே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.[5]

"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டுச் 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.

இவ்வாறு பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

Remove ads

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

  • எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே..
  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 1891-ஆம் ஆண்டில் கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1969: அவரது மரணத்திற்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக அவருக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

1990: இவருடைய படைப்புகள் தமிழ் நாடு அரசினால் உடைமையாக்கப்பட்டன.

Remove ads

ஆக்கங்கள்

பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. அம்மைச்சி (நாடகம்)[6]
  2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  4. எது பழிப்பு, குயில் (1948)
  5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)[6]
  7. கலை மன்றம் (1955)
  8. கற்புக் காப்பியம், குயில் (1960)
  9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்)[6]
  10. நீலவண்ணன் புறப்பாடு
  11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)[6]
  12. பெண்கள் விடுதலை
  13. விடுதலை வேட்கை
  14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  15. ரஸ்புடீன் (நாடகம்)[6]

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

Remove ads

நூல்கள்

பாரதிதாசன் பாடல்கள், படைப்புகள் மதுரைத் திட்டத்தில் உள்ளன. பாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

மேலதிகத் தகவல்கள் வ.எண், நூலின் பெயர் ...
Remove ads

திரையுலகில் பாரதிதாசன் [8]

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு எனப் பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல்

அவ்வகையில் இவர் பின்வரும் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதினார்:

மேலதிகத் தகவல்கள் வ.எண்., திரைப்படத்தின் பெயர் ...

இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களைத் தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். இவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றைச் சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல்கள் ...
Remove ads

கட்டுரைகள்

பாரதிதாசன் புதுவை முரசு, குடியரசு, குறள் மலர் மற்றும் குயில் ஆகிய இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[9]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், கட்டுரைத் தலைப்பு ...
Remove ads

மறைவு

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்

  1. வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 [10]

பாரதிதாசன் பற்றிய நூல்கள்

  1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads