பேரியம் பெராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரியம் பெராக்சைடு அல்லது பேரியம் பெரொக்சைட் (Barium peroxide) என்பது BaO2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கனிமச் சேர்மமாகும். தூய்மையான நிலையில் வெண்மையாகவும் தூய்மையற்ற நிலையில் சாம்பல் நிறத்திலும் இவ்வுப்பு காணப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் கனிம பெராக்சைடுகளில் ஒன்றான இதுதான் முதன்முதலில் கண்டறியப்பட்ட பெராக்சைடாகும். ஒரு ஆக்சிகரணியாக இது எரியும்போது மற்ற பேரியம் சேர்மங்களைப் போலவெ இதுவும் ஒளிரும் பச்சை வண்ணத்தைத் தருகிறது. பேரியம் பெராக்சைடு பட்டாசுத் தொழிலிலும் சிறிதளவு பயன்படுகிறது. ஐதரசன் பெராக்சைடுக்கு முன்னோடியாகவும் இது பயன்படுத்தப்பட்டது[2].
Remove ads
கட்டமைப்பு
பேரியம் பெராக்சைடு ஒரு பெராக்சைடு வகை உப்பாகும். இது இரண்டு துணை அலகுகள் ஆக்சிசனைக் கொண்டுள்ளது. திடரூப பேரியம் பெராக்சைடு கால்சியம் கார்பைடிற்கு (CaC2). ஒத்த சமவடிவ மூலகத்தைப் பெற்றுள்ளது.
தயாரிப்பும் பயன்களும்
ஆக்சிசன் பேரியம் ஆக்சைடுடன் மீள்வினை புரிவதால் பேரியம் பெராக்சைடு தோன்றுகிறது. சுமார் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெராக்சைடு தோன்றுகிறது மற்றும் 820 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசன் வெளிவிடப்படுகிறது.[3]
- 2 BaO + O2 ⇌ 2 BaO2
சுற்றுச்சூழலில் இருந்து ஆக்சிசன் பிரித்தெடுக்கப்படும் இவ்வினையே பிரின் செயல்முறை தற்பொழுது வழக்கொழிவதற்கு அடிப்படையாகும். மற்ற ஆக்சைடுகளான Na2O மற்றும் SrO போன்றனவும் இவ்வாறே செயல்படுகின்றன[4].
முன்னர் பேரியம் பெராக்சைடு கந்தக அமிலத்துடன் சேர்க்கப்பட்டு ஐதரசன் பெராக்சைடு தயாரிக்கப்பட்ட முறையும் தற்பொழுது வழக்கொழிந்து விட்டது:[2]
- BaO2 + H2SO4 → H2O2 + BaSO4.
கரையாத பேரியம் சல்பேட்டு வடிகட்டுதல் மூலம் கலவையிலிருந்து பிரிக்கப்பட்டது.
Remove ads
அடிக்குறிப்புகள்
இவற்றையும் காண்க
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads