பொன்னியம்மன்மேடு
சென்னை சுற்றுப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன்னியம்மன்மேடு[1] (Ponniammanmedu) இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன்மேடு நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 13°08'05.7"N, 80°13'35.1"E (அதாவது, 13.134910°N, 80.226406°E) ஆகும்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலை, பொன்னியம்மன்மேடு நகரை ஒட்டிச் செல்கிறது. மேலும் பெரும் வடக்கு வழித்தடம் (சாலை), பொன்னியம்மன்மேடு நகரைத் தொட்டு செல்கிறது. சென்னையின் துணை புறநகர் பேருந்து நிலையம் எனப்படும் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் பொன்னியம்மன்மேடு நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
இங்கிருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
கல்வி
பள்ளிகள்
டான் போஸ்கோ ஆரம்பப் பள்ளி, வெஸ்லி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இந்நகரின் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
தொழில்
பொன்னியம்மன்மேடு நகரை ஒட்டியுள்ள செம்பியம் ஹூசூர் தோட்டத்தில் அமைந்துள்ள சிம்சன் மற்றும் அதன் குழும தொழிற்சாலைகள், இந்நகர மக்களுக்கு நேரிடையாக மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
மழைநீர் வடிகால்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பொன்னியம்மன்மேடு பகுதியில் இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதனைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பொருட்டு, மின்மோட்டார்கள் தயாராக உள்ளன.[2]
வழிபாடு
கோயில்கள்
அதிக அளவில் பக்தர்கள் தினமும் வந்து செல்லும் பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள பிரசன்ன லெட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மூலக்கடைக்கு அருகில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads