போன் பௌத்தம்

From Wikipedia, the free encyclopedia

போன் பௌத்தம்
Remove ads

போன் பௌத்தம் (Bon, also spelled Bön)[2] (Tibetan: བོན་, Wylie: bon, Lhasa dialect IPA: [pʰø̃̀] ), திபெத்தை மையமாகக் கொண்ட ஒரு பௌத்தப் பிரிவாகும். போன் பௌத்தம், திபெத்திய பௌத்தத்திலிருந்து சிறிது வேறுபட்டு, தனித்தன்மையுடன் விளங்குகிறது. திபெத்தில் போன் பௌத்தம் 11ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[3] மேலும் போன் பௌத்த தாந்ரீகச் சமயச் சாத்திரங்கள் பத்மசம்பவர் மற்றும் டாகினியை அடிப்படையாகக் கொண்டதாகும்.[4] திபெத் பகுதியில் பௌத்தம் பரவுவதற்கு முன்னிருந்த பழைமையான சமயம் போன் ஆகும். பின்னர் பௌத்த சமயத் தாக்கத்தின் விளைவாக புதிய சமயமாக தன்னை மாற்றிக் கொண்டது.

Thumb
போன் பௌத்த சமயச் சின்னம், இடப்புறமுக விளங்கும் சுவஸ்திக்கா. [1]
Remove ads

சமயப் பரம்பல்

Thumb
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் நாகவா நகரத்தில் போன் பௌத்த மடாலயம்

போன் பௌத்த சமயம் சீனாவின் சிச்சுவான், கிங்ஹாய் மாகாணம், கான்சு, யுன்னான் மற்றும் சிஞ்சியாங் மாகாணங்களிலும், இந்தியாவின் லடாக் மற்றும் பல்திஸ்தான் பகுதிகளிலும் மற்றும் பூட்டான், சிக்கிம், நேபாளத்தின் வடக்கின் பால்பா மாவட்டம் மற்றும் மஸ்தாங் மாவட்டங்களில் வாழும் செர்ப்பா மற்றும் தமாங் மக்கள் வாழும் பகுதிகளிலும், வடக்கு மியான்மர் பகுதிகளிலும் போன் பௌத்தம் பின்பற்றப்படுகிறது.

Thumb
போன் பௌத்த சமய பிக்கு, நேபாளம்
Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads