போபால் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.


பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் கீழ், போபால் இராச்சியம், போபால் முகமையில் 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.[4]
Remove ads
வரலாறு
முகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான தோஸ்த் முகமது கான் என்பவர்[5], 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.
இந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார். 1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.
இந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு
இந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது.
Remove ads
போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்
- நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)
- நவாப் யர் முகமது கான் (1728–1742)
- நவாப் பைசு முகமது கான் (1742–1777)
- நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)
- நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)
- நவாப் வசீர் முகமது கான் (1807–1816)
- நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)
- குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)
- நவாப் ஜகாங்கீர் முகமது கான் (1837–1844)
- ஜெகான் பேகம் (1844–1860 மற்றும் 1868–1901)
- கைகுஸ்ரூ பேகம் (1901–1926)
- நவாப் ஹமிதுல்லா கான் (1926–1949)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads