மகளிர் மட்டும்
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகளிர் மட்டும் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்தார்.[1][2][3]
இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- நாசர் - ஜி. கே. பாண்டியன்
- ரேவதி - சத்யா
- ஊர்வசி - ஜானகி
- ரோகிணி - பாப்பம்மா
- நாகேஷ் - இறந்த பிணம்
- தலைவாசல் விஜய் - பாப்பம்மாவின் கணவர்
- 'பசி' சத்யா - மாதவி
- எஸ். தாணு - தமிழவன்
- வி. எஸ். ராகவன் - மருத்துவர்
- கிரேசி மோகன் - மருத்துவர்
- ரேணுகா - பாண்டியனின் மனைவி
- கமல்ஹாசன் - சிறப்புத் தோற்றம்
தயாரிப்பு
கமல்ஹாசன் திரு எனும் திருநாவுக்கரசு என்பவரை இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார்.[4]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads