மகளிர் மட்டும் (2017 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

மகளிர் மட்டும் (2017 திரைப்படம்)
Remove ads

மகளிர் மட்டும் (Magalir Mattum) 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். 2015 ஆவது ஆண்டில் வெளியான குற்றம் கடிதல் திரைப்படத்தை இயக்கிய பிரம்மா இயக்கும் இத்திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்திலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். சூர்யா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 சூலை மாதம் தொடங்கியது.

விரைவான உண்மைகள் மகளிர் மட்டும்Magalir Mattum, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

2016 பிப்ரவரியில், இப்படத்தின் கதையை இயக்குநர் பிரம்மா ஜோதிகாவிடம் கூறினார். கதை பிடித்துப் போனதால் ஜோதிகா இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும, இப்படத்தைத் தாமே தயாரிப்பதாக ஜோதிகா வின் கணவர் சூர்யா தெரிவித்தார்.[1] ஜோதிகா, இப்படத்திற்காக 20 நாள்கள் நடிப்புப் பயிற்சியினை மேற்கொண்டார்.[1][2] 2016 சூலை மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் இணைந்தனர்.[3] 2016 ஆகஸ்டு மாதம் திண்டிவனத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததுடன் இப்படத்தின் 30 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads