மகாகவி பாரதி நகர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாகவி பாரதி நகர் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1][2] 13.125800°N, 80.262100°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். சுருக்கமாக, எம். கே. பி. நகர் என்றும் அழைக்கப்படும் இப்பகுதிக்கு, வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், எருக்கஞ்சேரி, சத்தியமூர்த்தி நகர், கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்களாகும்.

விரைவான உண்மைகள் மகாகவி பாரதி நகர் எம். கே. பி. நகர், நாடு ...

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம், மகாகவி பாரதி நகர் பகுதிக்கு பேருந்து சேவைகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளதால், இங்கிருந்தும் சென்னை மாநகரின் பல பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாகப் பயணிக்கும் பொருட்டு, அதற்குரிய டோக்கன் 2022 ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் முதல் வழங்கப்படுகிற சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையமும் ஒன்று.[3] இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே வியாசர்பாடி ஜீவா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ. தூரத்திலுள்ள பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் மூலமும் இங்குள்ள மக்கள் பலனடைகின்றனர். இந்தியா முழுவதும் பயணம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், மகாகவி பாரதி நகர் பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கிருந்து 32 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

சென்னையிலுள்ள 135 காவல் நிலையங்களில் மகாகவி பாரதி நகர் காவல் நிலையமும் ஒன்று.[4]

மகாகவி பாரதி நகர் பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads