மகாத்மா காந்தி வரிசை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்த பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை 1996 க்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்து பணத்தால்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம்பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 இல் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பலான மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட்டன.

Remove ads

பணத்தாள்கள்

மேலதிகத் தகவல்கள் மகாத்மா காந்தி வரிசை, படம் ...

மொழிகள்

ஒவ்வொரு பணத்தாளிலும் 17 மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றன. மொழிகளின் வரிசை பின்வறுமாறு அசாமிய மொழி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி மொழி, கொங்கணி மொழி, மலையாளம், மராத்திய மொழி, நேபாளி மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி மொழி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

மேலதிகத் தகவல்கள் இந்தியாவின் அலுவல் மொழிகள், மொழிகள் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads