பதினெண் புராணங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பதினென் புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப் பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன.[1] வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.

வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் பொ.ஊ.மு. 6-ம் அல்லது பொ.ஊ.மு. 7-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன.[2] இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவ புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மாவின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், விஷ்ணுவின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவனின் பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

Remove ads

18 மகாபுராணங்கள்

  1. பிரம்ம புராணம்
  2. பத்ம புராணம்
  3. விஷ்ணு புராணம்
  4. சிவ புராணம்
  5. பாகவத புராணம்
  6. நாரத புராணம்
  7. மார்க்கண்டேய புராணம்
  8. அக்னி புராணம்
  9. பவிசிய புராணம்
  10. பிரம்ம வைவர்த்த புராணம்
  11. லிங்க புராணம்
  12. வராக புராணம்
  13. கந்த புராணம்
  14. வாமன புராணம்
  15. கூர்ம புராணம்
  16. மச்ச புராணம்
  17. கருட புராணம்
  18. பிரம்மாண்ட புராணம்

மகாபுராணங்கள்

பழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 460, 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் ​பெற்றுள்ளது. அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டேயம், 4) லிங்கம், 5) காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) வைணவம் , 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்கினேயம், 18) பிரம்மவைவர்த்தம் என்பன.

இவற்றை முறையே, "மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், லிங்கம் காருடம் நாரதீயம் பவிஷ்யம், பிரம்மாவைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராணமாகும்" எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.

இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.

"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம்வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம்பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோடெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்."

"காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ்மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேதபேதமி லாக்கிநேயம் பிரம்மாவைவர்த்தம்மியாவு மோதிடநன்னாற்கேட்டோமொன் பதிற்றிரு புராணம்." (பாடல் எண் 315, 316)

மேலும் "பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற்றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடினருமை யிங்கெழுபஃதந்த நாலதிற்கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்" (பாடல் 565) என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்." என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

Remove ads

சிவ புராண பிரச்சணை

குறிப்புகள்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads