மகாமாயா

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மகாமாயா
Remove ads

மகாமாயா என்பது 1944-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் 1944-ஆம் ஆண்டு வெளியானது.[1]

விரைவான உண்மைகள் மகாமாயா, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

காந்தார நாட்டின் இளவரசியான மகாமாயாவும் (பி. கண்ணாம்பா), ஒரு அயல் நாட்டின் இளவரசனான விக்ரமசிம்மனும் (பி. யு. சின்னப்பா) ஒரே குருவின் மாணவர்களாக அவரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றனர். ஒரு நாள் மகாமாயா அப்பாவித்தனமாக விக்ரமனின் வாளுக்கு மாலை ஒன்றைச் சூட்டி விடுகிறாள். அதன் பின் விளைவு அவளுக்குத் தெரியவில்லை. ஒரு வீரனின் வாளுக்கு ஒரு பெண் மாலை சூட்டினால் அவள் அவனையே திருமணம் செய்ததாக அப்போது வழக்கம் இருந்தது. அவள் தன் வாளுக்கு மாலை சூட்டியதை விக்ரம் அறிவான்.

இருவரும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பியதும் வேறு வேறு வரன்களை மணந்து கொள்ளுகின்றனர். பின்னர் ஒரு சமயம் விக்ரமன் மகாமாயாவைச் சந்திக்கிறான். அச்சமயம் அவள் தனது வாளுக்கு மாலை சூட்டியதை நினைவூட்டி அவள் தனக்கே சொந்தமானவள் என விக்ரமன் உரிமை கொண்டாடுகிறான். ஆனால் மகாமாயா அதற்குச் சம்மதிக்கவில்லை. எனவே விக்ரமன் அவளைக் கடத்திச் செல்கிறான். மகாமாயா அவனிடமிருந்து தப்பி தன் நாட்டுக்குச் செல்கிறாள்.

அங்கே அவளது கணவன் அவளை ஏற்க மறுக்கிறான். எனவே, மகாமாயா தன் கற்பை நிலை நாட்ட தன் குழந்தையையும் கொன்று தானும் உயிரை மாய்த்துக் கொள்ளுகிறாள்.[1]

Remove ads

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...

நடனக் குழுவினர்: கே. வரலட்சுமி, டி. ராஜ்பாலா, வி. ராஜேசுவரி, கே. ராஜராஜேசுவரி, கே. எஸ். சரோஜினி, எம். எஸ். சாந்தா[2]

Remove ads

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பாளர்கள்: எம். சோமசுந்தரம், எஸ். கே. மொகிதீன்
  • இயக்குநர்: டி. ஆர். ரகுநாத்
  • திரைக்கதை வசனம்: இளங்கோவன்
  • ஒளிப்பதிவு: மார்க்கஸ் பார்ட்லி
  • படப்பிடிப்பு : ஜித்தேன் பானர்ஜி
  • படத்தொகுப்பு: ஏ. காசிலிங்கம்
  • ஒலிப்பதிவு: தீன்ஷா கே. தெஹ்ராணி
  • நடனம்: எம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பண்டிட் போலோநாத் சர்மா
  • கலை: எஃப். நாகூர்
  • கலையகம்: நியூடோன்[1]
  • பாடல்கள்: டி. கே. சுந்தர வாத்தியார், கம்பதாசன்
  • இசையமைப்பு: எஸ். வி. வெங்கட்ராமையர்

தயாரிப்பு விபரம்

கதையை எழுதி முடிக்க இளங்கோவனுக்கு சுமார் ஓராண்டு காலம் பிடித்தது. அப்போதும் அவரால் கதையை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. மூன்று வித முடிவுகளை எழுதினார். தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். மூன்று விதமான முடிவுகளும் படமாக்கப்பட்டன. எனினும் இறுதி முடிவு படத்தில் உள்ளபடி சேர்க்கப்பட்டது. அப்போது இரண்டாவது உலகப்போர் காலமாதலால் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்கு மேல் இருக்கலாகாது என்ற சட்டம் காரணமாக இப்படத்தின் நீளம் 11,000 அடியாக இருந்தது.[1]

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகிய இருவரும் இசையமைத்தனர். பாடல்களை கம்பதாசனும், டி. கே. சுந்தர வாத்தியாரும் எழுதினார்கள். ஒன்பது பாடல்கள் இருந்தபோதிலும்,[2] பி. யு. சின்னப்பா பாடிய சிலையே நீ என்னிடம் என்ற பாடல் மட்டும் பிரபலமானது.[1]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடியவர் ...
Remove ads

வசூல்

பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோரின் சிறந்த நடிப்பாலும், உயர்ந்த தயாரிப்பினாலும் விமர்சகர்களிடையே சிறந்த படம் என சிலாகிக்கப்பட்டது. ஆயினும் அந்தக் கால இரசிகர்கள் படத்தின் கதையில் ஒரு அரசன் மணமான பெண்ணின் மேல் விருப்பம் கொள்வதை விரும்பாததால் படம் தோல்வியைத் தழுவியது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads