மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம்

மத்தியப் பிரதேச அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம்map
Remove ads

மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சத்தர்பூர் - ஜான்சி நெடுஞ்சாலையில், துபேலாவில் உள்ள ஒரு பழைய அரண்மனையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

Thumb
கி.பி முதலாம் பாஜி ராவ் பேஷ்வாவால் 1736 இல் என்பவரால் கட்டப்பட்ட மகாராஜா சத்ராசலின் கல்லறை, துபேலா.
விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூற்று ...
Remove ads

துவக்கம்

இந்த அருங்காட்சியகம் செப்டம்பர், 1955 ஆம் ஆண்டு சத்ராசால் கட்டப்பட்ட அரண்மனையில் நிறுவப்பட்டது. தற்போது, இந்த அருங்காட்சியகத்தில் எட்டு காட்சிக் கூடங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு காட்சிக் கூடங்களில் கல்வெட்டுகள், செப்புத் தகடுகள், சதித் தூண்கள், லிங்கங்கள் உள்ளன. மேலும் குப்தர் காலம் மற்றும் கலாச்சுரி காலம் ஆகிய காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுப்பொறிப்புடன் கூடிய சிற்பங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் சக்தி வழிபாடு தொடர்பான அதிக அளவிலான சிற்பங்கள் உள்ளன. மேலும் இங்கு குறிப்பிடத்தக்க வகையில் சமண சிற்பங்களும் காட்சிக்கு உள்ளன. இது புண்டேலா மன்னர்களின் ஆடை வகைகள், ஆயுதங்கள் மற்றும் ஓவியங்களையும் கொண்டு அமைந்துள்ளது.

Thumb
திறந்தவெளி காட்சிக்கூடம், மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம், துபேலா

துபேலா அருங்காட்சியகம் கஜுராஹோவிலிருந்து கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கஜுராஹோவிலிருந்து சாலை வழியாகச் சென்று அடையலாம்.

Remove ads

துபேலா

சத்தர்பூர் என்னுமிடத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், கஜுராஹோவிலிருந்து 62 கி.மீ. தொலைவிலும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சத்தர்பூர்-நாவகோன் சாலையில் உள்ள இதனை பெரும்பாலும் துபேலா அருங்காட்சியகம் என்றும் இதனை அழைக்கின்றனர். ஒரு அரண்மனையில் சத்ராசல் மன்னரால் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் துபேலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த பொருள்களும், நவீன காலத்தைச் சேர்ந்த பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொகுப்பின் மூலமாக சுற்றுலா வருவோர் கஜுராஹோவின் வரலாறு, வளர்ச்சி மற்றும் புண்டேலா வம்சத்தில் வீழ்ச்சி உள்ளிட்ட பலவற்றை அறிய முடியும். இந்த அருங்காட்சியகத்தில் ஓவியங்கள், போர்க் கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படத்தப்பட்டுள்ளன. சக்தி வழிபாடு தொடர்பான பல சிற்பங்களை இங்கு காணலாம். முதல் இரண்டு காட்சிக்கூடங்களில் குப்தர் மற்றும் கலாச்சுரி வம்சத்தைச் சேர்ந்த கலைப்பொருள்கள் அமைந்துள்ளன. அடுத்தபடியாக உள்ளது சமண சிற்பங்களைக் கொண்டு அமைந்துள்ள காட்சிக் கூடமாகும். இந்த காட்சிக்கூடம் ரிஷபநாதர், கோமேத் அம்பிகா, சர்வதோபத்ரிகா, சக்ரேஸ்வரி உள்ளிட்டோரின் சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்கு அமைந்துள்ள காட்சிக்கூடங்களின் மிகச் சிறப்பானதாக சூர்யபுத்ரா தேவந்தா, ஏகமுக லிங்கம், கஜசூர்வத் ஆகிய சிற்பங்களைக் கூலாம். இவற்றைத் தவிர கோட்பாடு அடிப்படையில் அமைந்த பல ஓவியங்களைக் காண முடியும். அவற்றில் ரேவா, பண்ணா, சர்காரி போன்ற மன்னர்கள் தொடர்பானவை அமையும். அருங்காட்சியகத்தின் உள்ளே மகிழ்ச்சிக்கூடம் உள்ளது. அதில் குவியாடி குழியாடி நிலையில் அமைந்துள்ள கண்ணாடிகளைக் காணமுடியும். அதன்மூலம் பார்க்கும்போது பார்ப்போரின் தோற்றம் வித்தியாசமாகத் தோன்றும். அதனை சுற்றுலா வருவோர் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.[1]

Remove ads

சிற்பங்கள்

இந்த அருங்காட்சியகத்தில் சமண தீர்த்தங்கரர்களை (போதனை கடவுள்களை) சித்தரிக்கும் பல சமண சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

வரலாறு

மகாராஜா சத்ராசல் (4 மே 1649 - 19 டிசம்பர் 1731), முகலாயப் பேரரசர் u ரங்கசீப்பிற்கு எதிராகப் போராடிய ஒரு இடைக்கால இந்திய வீரர், மற்றும் புண்டேல்கண்டில் தனது சொந்த ராஜ்யத்தை நிறுவி மகாராஜாவானார். சத்ரபூரின் வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒன்று மகாராஜா சத்ராசல் மக்பரா, இது உண்மையில் சத்ராசல் மகாராஜாவின் கல்லறை. இது ஒரு கட்டடக்கலை பார்வையில் ஒரு முக்கியமான நினைவுச்சின்னமாகும்.   பூண்டேலி கட்டிடக்கலைக்கான இந்த அழகான எடுத்துக்காட்டு கி.பி 1736 இல் மகாராஜா சத்ராசலின் நினைவாக பாஜி ராவ் பெஷாவா (முதல்) என்பவரால் கட்டப்பட்டது

துபேலாவில் உள்ள பிற நினைவுச்சின்னங்கள்

  • மஹாராணி கமலபதி நினைவுச் சின்னம். இது ஒரு உயர்ந்த மேடையில் ஒரு எண்கோண அமைப்பில் காணப்படுகிறது. அமைந்துள்ள . 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் புண்டேலி பாணியின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
  • ஷீட்டல் காரி 17 ஆம் நூற்றாண்டில் மகாராஜா சத்ராசலின் காலத்தில் கட்டப்பட்டது ஆகும், இந்த புகழ்பெற்ற நினைவுச்சின்னம் பணக்கார புண்டேலி கலைப் பாணியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த கோட்டை கோடை காலத்தின் உச்ச வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளும் நோக்கில், குடியிருப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டது. அதன் உட்புறம் பசுமையாக வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • மஹோபா கேட், 17 ஆம் நூற்றாண்டில் மகாராஜா சத்ராசால் அவர்களால் கட்டப்பட்டது. இந்த வாயில் புகழ் பெற்ற புண்டேலியின் கலைப்பாணியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது மஹோபா மற்றும் மௌ சஹானியா ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட நுழைவாயிலில் இரண்டு கதவுகள் உள்ளன.
  • ஸ்ரீ கிருஷ்ண பிராணாமி மந்திர் மகாராஜா சத்ராசல் கல்லறைக்கு அருகில் உள்ளது.
Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

  • Shah, Umakant Premanand (1987), Jaina-rūpa-maṇḍana: Jaina iconography, Abhinav Publications, ISBN 81-7017-208-X

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads