மகிந்த யாப்பா அபேவர்தன

இலங்கை அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மகிந்த யாப்பா அபேவர்தன
Remove ads

மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena; பிறப்பு: அக்டோபர் 10, 1945) இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1] இவர் முதல் தடவையாக 1983 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாத்தறை, அக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

விரைவான உண்மைகள் மகிந்த யாப்பா அபேவர்தனMahinda Yapa Abeywardanaநாடாளுமன்ற உறுப்பினர், 21-வது நாடாளுமன்ற சபாநாயகர் ...

மகிந்த யாப்பா அபேவர்தனா 1987 இல் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை வெளிப்படையாக எதிர்த்தார். இந்த ஒப்பந்தத்திற்கெதிராக நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தார். இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கினார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் இவரும் இணைந்தார். இக்கட்சியின் சார்பாக இவர் தெற்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1993 இல் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். 1994 இல் தெற்கு மாகாணசபையின் முதலமைச்சரானார். இரு தடவைகள் இவர் முதலமைச்சராக 1994 முதல் 2001 வரை பதவியில் இருந்தார்.

2001 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 2004 வரை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும், பின்னர் கலாச்சார அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

2010 தேர்தல் வெற்றியின் பின்னர் இவர் விவசாய அமைச்சரானார். இவர் அமைச்சராக இருக்கும் போது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துணைத் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராக நாடாளுமன்றத்தின் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads