மஞ்சள் கண் சிலம்பன்

From Wikipedia, the free encyclopedia

மஞ்சள் கண் சிலம்பன்
Remove ads

மஞ்சள் கண் சிலம்பன் (yellow-eyed babbler) என்பது தெற்கு, தென்கிழக்காசியாவைச் சேர்ந்த ஒரு குருவி வரிசைப் பறவையாகும். இது புதர், புல்வெளி மற்றும் ஈரநில வாழ்விடங்களில் வாழ்கிறது. இதன் பரவலான வாழிட எல்லை மற்றும் நிலையான எண்ணிக்கைக் காரணமாக இது செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் மஞ்சள் கண் சிலம்பன், காப்பு நிலை ...
Remove ads

வகைப்பாட்டியல்

இதில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[2]

  • C. s. nasale (Legge, 1879) – இலங்கை
  • C. s. hypoleucum (Franklin, 1831) – பாக்கித்தான், இந்தியா (வடகிழக்கு தவிர), தெற்கு நேபாளம்
  • C. s. sinense (Gmelin, JF, 1789) – வடகிழக்கு இந்தியாவில் இருந்து தெற்கு சீனம், வியட்நாம் வரை

விளக்கம்

மஞ்சள் கண் சிலம்பன் சுமார் 18 சென்டிமீட்டர்கள் (7.1 அங்குலம்) நீளமானது. கருப்பான குறுகிய அலகும், சற்று நீண்ட வலையும் உடையது. இதன் மேல்பகுதி பாக்கு நிறத்திலும், இறக்கைகள் இலவங்கப்பட்டை நிறத்திலும் இருக்கும். கண்-அலகு இடைப்பகுதி, புருவம் போன்றவை வெள்ளையாகவும், முதிர்ந்த பறவைகளில் கண்ணின் விளிம்பு ஆரஞ்சு-மஞ்சள் நிறமாகவும் இருக்கும். உடலின் அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். வால் இறகுகளில் பக்க இறகுகளைவிட நடு இறகுகள் இருமடங்கு நீளமானவை. களத்தில் ஆண் பெண் பறவைகளை பிரித்தறிய முடியாது.[3][4] இதன் பரந்த வாழிட பரப்பில் துணையினங்களாகக் கருதப்படும் பறவைகளுக்கு இடையே இறகுகளில் சில வேறுபாடுகள் உள்ளன.

Remove ads

பரவலும் வாழிடமும்

மஞ்சள் கண் சிலம்பனின் வாழிட எல்லை பாகிஸ்தானில் இருந்து இந்தியா, நேபாளம், இலங்கை வழியாக வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், சீனா வரை பரவியுள்ளது.[1] இது பொதுவாக வறண்ட மற்றும் ஈரப்பதமான பகுதிகள், வேளாண் நிலங்களில், புல் அல்லது முட்கள் நிறைந்த குறுங்காடுகளை வாழ்விடமாக கொண்டுள்ளது. இது முக்கியமாக சமவெளிகளில் வாழ்கிறது ஆனால் 1200 மீ உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.[7] இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப் பகுதியில் காணப்படுவதில்லை. அதன் கிழக்கு விளிம்புகளில் அல்லது பாலக்காடு போன்ற இடைவெளிகளில் மட்டுமே காணப்படுகிறது.[5]

நடத்தையும் சூழலியலும்

இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் ஐந்து முதல் பதினைந்து வரையிலான சிறு கூட்டமாகக் கதிர்க்குருவிகளோடு கலந்துபுதர்களிலும் மூங்கிற் கிளைகளிலும் பக்கவாட்டிலும்தலை கீழாகவும் தொங்கி இரைதேடும். பட்டாணிக் குருவிபோல இ்வாறு இரை தேடும் இது சிறு அரவம் கேட்டாலும் அஞ்சி மறைந்துவிடும். தத்துக்களிகள், கம்பளிப்பூச்சிகள், சிலந்தி முதலான பூச்சிகள் இதன் முக்கிய உணவு. சிறு பழங்களையும், மலர்த் தேனையும் உண்பதுண்டு. பூச்சிகளைப் பிடிக்கும் போது, இவை அவற்றைத் தங்கள் கால்களால் பிடிப்பதுண்டு.[6] ச்சீப், ச்சீப், ச்சீப் என சாதாரணமாகக் குரல் கொடுக்கும் இது அபாயம் என்று உணர்ந்தால் ச்சூஉர்ர் என கத்தும். இனப்பெருக்க காலத்தில் உயர இருந்து இனிமையாக பாடும். இதன் இனப்பெருக்க காலத்திலமானது, முக்கியமாக தென்மேற்கு பருவமழைக் (சூன் முதல் ஆகத்து வரை) காலமாகும். ஆனால் சில சமயங்களில் பின்வாங்கும் பருவமழைக் காலத்தின் போது இனப்பெருக்கம் செய்யும்.[7][8][9] இனப்பெருக்க காலத்தில் வாயின் உட்புற நிறமானது ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது. இது கூம்பு வடிவமான கோப்பை போன்ற ஆழ்ந்த கூட்டினைப் புல்லால் அமைத்து வெளிப்புறத்தைச் சிலந்தி நூலால் ஒட்டும், புல் குருத்துகளிடையே தரையில் இருந்து அரை மீட்டர் உயரத்தில் குறுக்காகத் தொங்கிக் கொண்டிருக்கக் காணலாம். பொதுவாக இது மூன்றுமுதல் ஐந்து வரையில் முட்டைகளை இடும். முட்டை இளஞ்சிவப்பான வெண்மை நிறத்தில் ஆழ்ந்த செம்பழுப்புக் கறைகளோடு காட்சியளிக்கும். பெற்றோர் இருவரும் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை பராமரிக்கினிறன. அடைகாக்கத் தொடங்கி 15-16 நாட்களுக்குப் பிறகு குஞ்சுபொரிக்கின்றன. மேலும் குஞ்சுகள் 13 நாட்களுக்குப் பிறகு கூட்டைவிட்டு வெளியேறுகின்றன. தாய்ப்பறவை கூட்டை நெருங்குபவர்களின் கவணத்தை திசைதிருப்ப புண்பட்டதுபோல அலறிப் புடைத்துக் கொண்டு அரற்றும்.[3]

வைரிகள் இந்தப் பறவைகளை வேட்டையாட முயல்வது அறியப்பட்டது.[10]

வட இந்தியாவின் சில பகுதிகளில் "மஞ்சள் மூகுக்கண்ணாடி" என்று பொருள்படும் குலாப் சாஷ்ம் என்று இவை அறியப்படுகின்றன. இவை சில சமயங்களில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படுகின்றன.[11][12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads