கிரைசோமா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரைசோமா (Chrysomma) என்பது பாடும் பறவைப் பேரினமாகும். இது கிளி அலகுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே இது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
Remove ads
வகைப்பாட்டியல்
இங்கிலாந்து விலங்கியல் வல்லநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1843ஆம் ஆண்டு கிரைசோமா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இதன் மாதிரி இனமாக திமாலியா கைபோலூகா பிராங்க்ளின் 1831 என நியமித்தார்.[1] இந்த உயிரலகு இப்போது மஞ்சள்-கண் சிலம்பனின் துணையினங்களுள் ஒன்றாகும்.[2][3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்களான குருசோசு அதாவது "தங்கம்" மற்றும் ஓமா என்றால் "கண்" ஆகியவற்றை இணைக்கிறது.[5]
இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]
செம்பழுப்பு வால் சிலம்பன் முன்பு இந்த பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் இது ஒற்றைச் சிற்றின பேரினமான மௌபினியாவுக்கு மாற்றப்பட்டது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads