மஞ்சள் நெற்றி மரங்கொத்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-fronted Pied Woodpecker)(லெயோபிகசு மகாராட்டென்சிசு) அல்லது மகரட்டா மரங்கொத்தி என்பது இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் சிறிய மரங்கொத்தி சிற்றினமாகும். இது இலியோபிகசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.
Remove ads
வகைப்பாட்டியல்
மஞ்சள் நெற்றி மரங்கொத்தி முதலில் 1801ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியல் வல்லுனரான ஜான் லாதம் என்பவரால் பைகசு மகாராட்டென்சிசு (Picus mahrattensis) என்ற இருசொல் பெயரில் விவரிக்கப்பட்டது. பின்னர் 1854ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியல் வல்லுனரான சார்லஸ் லூசியன் போனபார்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட லெயோபிகசு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரே இனம் இதுவாகும். மகாராட்டென்சிசு என்ற குறிப்பிட்ட அடைமொழி இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியான மராட்டாவிலிருந்து வந்தது. லெயோபிகசு என்ற பேரினப் பெயர் பண்டைக் கிரேக்க சொல்லான லியோசு அதாவது "மென்மையான" அல்லது "தாடி இல்லாத" பொருள்படும் சொல்லிலிருந்து தோன்றியது. பிகோசு என்றால் "மரங்கொத்தி" என்று பொருள்படும். மஞ்சள் நெற்றி மரங்கொத்தி டென்ட்ரோகோப்ட்சு பேரினத்தில் உள்ள மரங்கொத்திகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
Remove ads
உடலமைப்பு
இதனுடைய உடல் நீளம் 18 செ.மீ. ஆகும். குங்குமச் சிவப்பான உச்சிக் கொண்டையையும் மஞ்சள் நெற்றியையும் உடைய பழுப்பு நிறம் தோய்ந்த இதன் கருப்பு உடலில் வெள்ளைத் திட்டுக்கள் ஒழுங்கின்றிக் காணப்படும். மோவாய், தொண்டை, முன்கழுத்து ஆகியன வெண்மை நிறத்திலும் மார்பும் வயிறும் செம்மஞ்சளாகப் பழுப்புக் கீற்றுக்களுடன் காணப்படும். அடிவயிறு பளிச்சென்று குங்குமச் சிவப்பு நிறமாக இருக்கும்.
காணப்படும் பகுதிகள், உணவு
மஞ்சள் நெற்றி மரங்கொத்தியானது இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரை சார்ந்த கரை ஓரப் பகுதிகள் தவிர எங்கும் ஓரளவு தாராளமாகக் காணக் கூடியது. கள்ளிப் புதர்கள், சாலை ஓர மரங்கள் கருவைக் காடுகள், மாந்தோப்புகள் ஆகியவற்றில் திரியும். இது பசுமைமாறாக் காடுகளை விரும்புவதில்லை. புழு பூச்சிகளைத் தேடி உண்ணும் பறவைகளின் கூட்டத்தோடு கலந்து மரத்துக்கு மரம் தாவி பட்டைகளை அலகால் தட்டி, வெளிவரும் பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் பிடித்துத் தின்னும். கிளிக் கிளிக் என கீச்சுக் குரலில் கத்தும்.[2]
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் மே வரை மா வன்னி நுழைவாயிலுள்ள வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.
படங்கள்
- அரியானா பாரிதாபாத்
- அரியானா பாரிதாபாத்
- கவால் வன விலங்குகள் சரணாலயம், இந்தியா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads