மணலூர், சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணலூர், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும்.[1]
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடம் சிவகங்கையிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும் மணலூர் கிராமம் உள்ளது.
Remove ads
மக்கள் தொகையியல்
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மணலூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,463 ஆகும். அதில் ஆண்கள் 1,237: பெண்கள் 1,226 ஆகவுள்ளனர். தலித் சமூகத்தினர் 665 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 85.50% அகவுள்ளது. இக்கிராமத்தில் 626 வீடுகள் உள்ளது.[2]
மணலூர் ஊராட்சியில் உள்ள மணலூர் கிராமம், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
மணலூர் தொல்லியல் களம்
கீழடி கிராமத்திற்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் எனப்படும் இரண்டரை மீட்டர் உயரம் கொண்ட தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்ததில், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பலவகையான மட்கலன்கள், தொல்பொருட்கள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்களின் கட்டுமானங்கள், துளையிட்ட கூரை ஓடுகள் மற்றும் செங்கல் உறை கிணறுகள் இங்கு கிடைக்க பெற்றுள்ளன. இம்மேட்டின் கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொந்தகை என்ற ஊருக்கு செல்லும் பாதையில், இதனோடு தொடர்புடைய ஈமக்காடும் உள்ளது. இங்கு பல ஈமத்தாழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.[3]
மணலூர் தொல்லியல் களத்தில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
Remove ads
இதனையும் காண்க
- கீழடி அகழாய்வு மையம்
- கீழடி
- கொந்தகை
- அகரம்
- மணலூர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads