மணவாளக்குறிச்சி

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

மணவாளக்குறிச்சிmap
Remove ads

மணவாளக்குறிச்சி (ஆங்கிலம்:Manavalakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்த இப்பேரூராட்சிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது. இது நாகர்கோவிலுக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.2 ச.கி.மீ. பரப்பும், 15 பகுதிகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3123 வீடுகளும், 10969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.13°N 77.3°E / 8.13; 77.3 ஆகும்.[7]

தொழில்கள்

இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக மீன் பிடித்தல், விவசாயம், கயிறு திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன. கடற்கரை சார்ந்து மணல் நிறுவனம் ஒன்று உள்ளது. மத்திய அரசின் கீழ் இந்நிறுவனம் இயங்குகிறது. ஐஆர்ஈஎல் இந்திய அரியவகை கனிமங்கள் நிறுவனம் என அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு கிடைக்கும் கடல் மணலில் உள்ள கனிமங்களான இல்மனைட், சிர்கான், ரூட்டைல் போன்றவற்றினைப் பிரித்தெடுக்கின்றனர். இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவை அணுசக்தி, பைஞ்சுதை, உலோக உற்பத்தி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads