மணியகாரன்பாளையம்

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணியகாரன்பாளையம் (Maniyakarampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புறநகர்ப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள் மணியகாரன்பாளையம்Maniyakarampalayam, நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 449 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணியகாரன்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°02'55.3"N 76°58'17.4"E (அதாவது, 11.048700° N 76.971500° E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

கோயம்புத்தூர், காந்திபுரம், கணபதி, துடியலூர், கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சின்னவேடம்பட்டி, சங்கனூர், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி ஆகியவை மணியகாரன்பாளையத்திற்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் நிறுவனப் போக்குவரத்து பேருந்துகளில் பல மணியகாரன்பாளையம் வழியாகச் செல்கின்றன.

கல்வி

பள்ளி

மணியகாரன்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 90.11 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது, அதற்கு முந்தைய கல்வியாண்டின் தேர்ச்சியை (89.77%) விட சற்றுக் கூடுதலானதே.[1]

நூலகம்

மணியகாரன்பாளையம் பகுதியிலுள்ள நேரு அவென்யூவில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 'வைகோ வளாகம்' என்ற பெயரில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட தனியார் கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் முதல் தளத்தில் சுமார் 7,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இயங்குகிறது. 'யாழ் நூலகம்' என்று இந்நூலகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பழைமை வாய்ந்த நூலகம் ஒன்று சில தீய சக்திகளால் தீக்கிரையாக்கப்பட்டதின் தாக்கத்தினால், அதன் நினைவாக இந்நூலகத்திற்கு, யாழ் நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads