காந்திபுரம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்திபுரம் (ஆங்கிலம்: Gandhipuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது கோவை மாநகராட்சியில் மிக முக்கியமான வணிக நிறுவனங்கள் மிகுதியாக உள்ள வணிக பகுதியாகும். முன்பு இப்பகுதி "காட்டூர்" என்று அழைக்கப்பட்டது.
ஒரு குடியுருப்பு பகுதியாகவே கருதப்பட்ட இவ்விடம், இப்பொழுது நகரின் முக்கிய வணிகப்பகுதியாக மாறியுள்ளது. நகரின் மத்தியில் இருப்பதினால் வணிகம், பொழுதுபோக்கு மற்றும் உள்-நகர பேருந்து சேவைக்கு மையமாக செயல்படுகிறது.
Remove ads
நிலவியல்
காந்திபுரம், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரத்திலும், நகர ரயில்நிலையம் மற்றும் வட-கோவை சந்திப்பில் இருந்து தலா 3 கி.மீ. மற்றும் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோவை நகரின் அனேக பகுதிகளும் உள்ளூர் பேருந்து சேவைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைந்துள்ள 10 பேருந்து நிலையங்களில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையமும் ஒரு பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்துதான் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான பேருந்து சேவை இயக்கப்படுகிறது.இங்கு
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-சேலம்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கோயம்புத்தூர்
என தமிழக போக்குவரத்து சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், பண்ணாரி, கோபிசெட்டிபாளையம், நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரு, அவினாசி, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில், அந்தியூர் என தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான பேருந்து சேவை இயக்கப்படுகின்றன.
Remove ads
நகரப் பேருந்து நிலையம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைந்துள்ள 7 பேருந்து நிலையங்களில் இதுவும் ஒரு பேருந்து நிலையம் ஆகும். இது கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளுடன் உள்ளூர் பேருந்து சேவைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சேவைகளை மாநகர் போக்குவரத்துக் கழகம்-கோவை வழங்குகிறது.
மத்திய கோவை சாலைப் போக்குவரத்து அலுவலகம் ( TN 66)
காந்திபுரத்தில் இருந்து பந்தயசாலை செல்லும் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
பொருளாதாரம்
காந்திபுரம், கோயம்புத்தூர் நகரின் மிகப்பெரிய வர்த்தக மையம். கோயம்புத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள அனேக தொழிற்சாலைகளின் நிறுவன அலுவலகங்கள் காந்திபுரத்தில் செயல்படுகின்றன. காந்திபுரம் உள்ள கிராஸ் கட் சாலை கோயம்புத்தூர் நகரில் டவுன்ஹால் மற்றும் உக்கடத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வணிக மையமாக உள்ளது.
காந்திபுரம் மேம்பாலம்
காந்திபுரத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.முதல் அடுக்கானது, பார்க் கேட் சந்திப்பு முன்பிருந்து கணபதி டெக்ஸ்ட்டூல் பாலம் முன்பு வரையும், இரண்டாம் அடுக்கானது, அவாரம்பாளையம் சந்திப்புக்கு அரை கிலோமீட்டர் முன்பிருந்து 100 அடி சாலை வரையும் அமைக்கப்பட்டுள்ளது .
முன்மொழியப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில்
கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தடம் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான கணேசபுரம் பகுதி முதல் காந்திபுரம், பேரூர் வழியாக சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் வரை முன்மொழியப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads