மதனகோபால சுவாமி கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைணவக் கோயில் From Wikipedia, the free encyclopedia

மதனகோபால சுவாமி கோயில்map
Remove ads

மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர், மதனகோபால சுவாமி என்ற பெயருடன் கையில் புல்லாங்குழலுடன், ச‌‌த்‌தியபாமா‌ருக்மணி சமேதராக அருள் புரிகிறார். மதுரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் தனியாக உள்ளன. தல விருட்சம் வாழை மரம் ஆகும்.[1].

விரைவான உண்மைகள் மதனகோபால சுவாமி கோயில், ஆள்கூறுகள்: ...
Thumb
மதனகோபால சாமி கோயில்

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், மதனகோபால சுவாமி கோயில் கற்றூண்களில் பல, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பிலடெல்பியா காட்சிக்கூடத்தில் ஒரு மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது.[2]

கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் ஆகியவை மதனகோபால சுவாமி கோயிலுக்கு மிகமிக அருகில் அமைந்துள்ள இரு கோயில்களாகும்.

Remove ads

பிற சன்னதிகள்

  • நவநீதகிருஷ்ணன் சன்னதி
  • சக்கரத்தாழ்வார் சன்னதி

தலச்சிறப்பு

ஆண்டாளும் பெரியாழ்வாரும் ஒரு முறை திருவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், மதனகோபால சுவாமியை வழிப்பட்டுச் சென்றதாக இக்கோயில் தல புராணம் கூறுகிறது.

துணைக் கோயில்கள்

மதனகோபால சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் அமைந்த கோயில்கள்:

  1. ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை - 625001
  2. வேங்கடமூர்த்தி ஐயனார் கோயில், அனுப்பானடி, மதுரை - 625009
  3. சேவகபெருமாள் ஐயனார் கோயில் & வெங்கடாஜலபதி கோயில், ஆலமரம் பேருந்து நிறுத்தம், அண்ணாநகர், மதுரை - 625020

திருவிழாக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads