இராம நவமி
இந்துக்கள் பண்டிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராம நவமி (Rama Navami), விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.[4][5] இந்த விழா, வசந்த காலத்தில் சைத்ர நவராத்திரியின் ஒரு பகுதியாகும். இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில், வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நிகழும். இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இராம நவமி ஒரு விருப்ப விடுமுறையாக வழங்கப்படுகிறது.
சில இடங்களில் நவராத்திரிகளின் ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால், இந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது [6][7].
Remove ads
இராமநவமி அன்று இராமாயணம் உள்ளிட்ட இராம கதைகளை வாசிப்பார்கள். சில வைணவ இந்துக்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குள் வேண்டுதல் செய்கிறார்கள். சிலர் பூசை, ஆரத்தியின் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய பஜனை அல்லது கீர்த்தனையில் ஈடுபடுகின்றனர்.[8] சில பக்தர்கள் இராமனை ஒரு குழந்தையாக உருவகித்து தொட்டில்களில் இட்டு வணங்குகின்றனர். தொண்டு நிகழ்வுகளும் சமூக உணவுகளும் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த விழா பல இந்துக்களுக்கு தங்கள் வாழ்க்கை நெறிகளை எண்ணிப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகத் திகழ்கிறது.[9] சிலர் இந்த நாளை நோன்பிருந்தும் கழிக்கின்றனர்.[10]
இராம நவமியன்று, அயோத்தியிலும் இந்தியா முழுவதிலும் உள்ள ஏராளமான இராமன் கோவில்களில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பல இடங்களில் இராமன், சீதை, இலட்சுமணன், அனுமன் ஆகியோரின் தேரோட்டங்கள் நடைபெறுகின்றன.[11][12] அயோத்தியில், பலர் புனித ஆறெனக் கருதப்படும் சரயுவில் நீராடிவிட்டு இராமன் கோயிலுக்குச் செல்கின்றனர்.[13][14]
Remove ads
கொண்டாட்டங்கள்
இராமாயணத்தில் இராமனின் வாழ்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அயோத்தி (உத்தர பிரதேசம்), இராமேசுவரம் (தமிழ்நாடு), பத்ராச்சலம் (தெலங்காணா), சீதாமர்ஹி (பீகார்) போன்ற நகரங்களில் முக்கிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.[16][17][18] சில இடங்களில் தேரோட்டங்களையும் நடத்துகிறார்கள். சில இடங்களில் இராமன், சீதையின் திருமண விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.[13][17][19][20].
இந்த விழா இராமனின் பெயரால் அழைக்கப்பட்டாலும், இராமனின் வாழ்க்கைக் கதையில் சீதை, இலட்சுமணன், அனுமன் ஆகியோரின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விழா பொதுவாக நடத்தப்படுகிறது.[21] சில வைணவ இந்துக்கள் இந்துக் கோயில்களில் திருவிழாவைக் கடைப்பிடிக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடுகிறார்கள்.[22] சில சமூகங்களில், சூரியக் கடவுளான சூரியன் வழிபாடு, விழாக்களின் ஒரு பகுதியாக உள்ளது.[22] சில வைணவ சமூகங்கள் வசந்த கால நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இராமனை நினைத்து இராமாயணத்தைப் படிக்கிறார்கள்.[16] சில கோயில்களில், மாலையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்.[22] சூரிய குல வழித்தோன்றல்கள் இராமனின் முன்னோர்கள் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், அதிகாலையில் சூரியனை வணங்குவதன் மூலமும் இராம நவமி விழா கொண்டாடப்படுகிறது.[23][24]
கருநாடகாவில், இராமநவமி அன்று சில இடங்களில் பானகத்தோடு சில உணவுகளையும் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீராமசேவா மண்டலி என்கிற அமைப்பு, ஒரு மாதம் முழுவதும் மரபார்ந்த இசை விழாவை நடத்துகிறது. 80 ஆண்டுகள் பழமையான இந்த இசைவிழாவில் இந்திய மரபுவழி இசைக்கலைஞர்கள், அவர்களது மதத்தைப் பொருட்படுத்தாமல், கருநாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகிய இரு வகைகளில் இருந்தும் இராமனுக்காகக் கூடியிருக்கும் பார்வையாளர்களு இசைவிருந்து படைக்கிறார்கள்.[25]
தென்னிந்திய இராமநவமி
தென்னிந்தியாவில் இந்த நாள் இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.[26][27].
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலத்தில் நடத்தப்படும் "கல்யாணம்" மிகவும் புகழ்பெற்றதாகும்[28]
ஒடிசா, சார்க்கண்டு, மேற்கு வங்காளம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களில், ஜெகந்நாதர் கோயில்கள், அந்தந்த ஊர் வைணவ சமூகங்கள் இராம நவமியைக் கொண்டாடுகின்றன. மேலும், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் நடத்தும் ஜெகநாதர் தேரோட்டத்திற்கான தயாரிப்புகள் தொடங்கும் நாளாகவும் கருதுகின்றனர்.[29]
1910-ஆம் ஆண்டுக்கு முன் காலனித்துவ தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தோட்டங்கள், சுரங்கங்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததன் பொருட்டு, இந்தியாவை விட்டு வெளியேறிய இந்திய ஒப்பந்த ஊழியர்கள், டர்பன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா, சுரிநாம், ஜமேக்கா, பிற கரிபியன் நாடுகள், மொரிசியசு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரிந்து வந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் இராமாயணத்தைப் படித்து ஓதியும், தியாகராஜர், பத்ராச்சல இராமதாசு ஆகியோரின் பாடல்களைப் பாடியும், தொடர்ந்து இந்துக் கோவில்களில் தங்கள் மரபுவழித் திருவிழாக்களுடன் சேர்த்து இராம நவமியையும் கொண்டாடி வருகிறார்கள்.[30]
பிஜியில் உள்ள இந்துக்களும் வேறு இடங்களில் மீண்டும் குடியேறிய பிஜி இந்துக்களும் இராமநவமியைக் கொண்டாடுகிறார்கள்.[31]
அகில உலக கிருஷ்ண பக்திக் கழக பக்தர்கள் பகல் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்.[22] இந்த அமைப்பின் பன்னாட்டுக் கிளைகள் பலவும் வளர்ந்து வரும் உள்ளூர் இந்து பகதர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இராமநவமியைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.[32]
Remove ads
முக்கியத்துவம்
தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், அதர்மத்தை வென்று தருமத்தை நிலைநாட்டுவதையும் குறிக்கும் வகையில் இராமநவமியின் முக்கியத்துவம் உள்ளது.[சான்று தேவை]
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads