மதுக்கரை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
Remove ads
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
நகராட்சி அமைவிடம்
இந்நகராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே ஒத்தக்கல்மண்டபம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
21.47 ச.கி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 8,153 வீடுகளும், 30,357 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
புவியியல்
இவ்வூர் (10.9145°N 76.9486°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 394.42 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
இதனையும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads