சி. ஆறுமுகம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. ஆறுமுகம் (C. Arumugam)(1 ஏப்ரல் 1930-2 சூன் 2005)[1] என்பவர் மதுராந்தகத்தார் என்ற பெயரால் பிரபலமானவர். இவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில் 1927ல் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். செங்கை அண்ணா மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் திமுக சார்பாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், 1971,[2] 1977, 1984 சட்டமன்றத் தேர்தல்களில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
1984 நடந்த சட்டமன்ற தேர்தலில் 90 பேரை எதிர்த்து நின்று மிகக் கடுமையாக போராடி வெற்றி பெற்றவர். பின்னர் தலைவரின் ஆணை ஏற்று, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எரித்து தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.[4]
Remove ads
இறப்பு
செ. ஆறுமுகம் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் 2ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads