மதுரோதைய ஈசுவரமுடையார் கோயில்
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரோதய ஈசுவரமுடையார் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. கோயிலுக்கு நிபந்தங்கள் அளிப்பது தொடர்பாக சடையவர்மன் சிறீவல்லப பாண்டியன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.[2] கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது.[2]
அமைப்பு
இக்கோயில் ஊருக்கு மேற்கே அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோட்டை போன்ற கோயில் மதிலும், கோயிலும் சிவப்பு நிற கிரானைட் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. கோயில் எதிரே தெப்பக்குளமும் பாண்டியன் கிணறும் அமைந்துள்ளன. [2]
கோயிலின் வாயிலில் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. வாயிலில் நுழைந்தால் முன்புறம் வேலைப்பாடுகள் கொண்ட முகமண்டபம் உள்ளது. இதையடுத்து மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் சிவனேசவல்லி அம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து கருவறையில் சிவன் சந்நிதியும் உள்ளன. கோட்டங்களில் நர்த்தன கணபதி, தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், துர்க்கை, கேதுவிக்கிரம் போன்றவை உள்ளன. கருவறை விமானத்தின் உச்சி சதுர வடிவில் உள்ளது. கருவறை, மகாமண்டபம் ஆகியவற்றைச் சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது.[2]
Remove ads
சிற்ப வேலைப்பாடுகள்
சிற்ப வேலைப்பாடுகள் மிக்கதாக இக்கோயில் உள்ளது. கோயில் தூண்கள் வேலைப்பாடு மிக்கவையாக உள்ளன. தமிழ்நாட்டின் பிற கோயில்கள் போல இங்கு பிரம்மாண்ட சிற்பங்கள் இல்லை. மாறாக, இக்கோயில் சிறிய நுட்பமான சிற்பங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் தேவ கோட்டத்தில் பிரஸ்தார மட்டத்தில் உள்ள கொடுங்கைகளின் கீழ் பல்வேறு தெய்வச் சிற்பங்கள் சிற்றுளி கொண்டு வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
வழிபாடு
இக்கோயிலில் இருகால பூசை நடக்கிறது. சித்திரா பௌர்ணமி நாளில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடிப் பூரம், அட்சய திருதியை, விநாயக சதுர்த்தி, பரதநாட்டிய நிகழ்வுடன் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகை விளக்கீடு, கார்த்திகை முதல் திங்கள் நாளன்று 108 சங்காபிசேகம், ஆருத்திரா தரிசனம், தைப்பொங்கல் மூன்று நாள் உற்சவம், மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads