மத்திய பாரதம்

இந்திய முன்னாள் மாநிலம் (1947-1957) From Wikipedia, the free encyclopedia

மத்திய பாரதம்map
Remove ads

மத்திய பாரதம் (Madhya Bharat, also known as Malwa Union)[1]1947-இல் இந்திய விடுதலைக்கு பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையில் இருந்த 25 சுதேச சமஸ்தானங்களை இணைத்து 28 மே 1948 அன்று நிறுவப்பட்ட இந்தியாவின் ஒரு ஆட்சிப் பகுதியாகும்[2][3]

விரைவான உண்மைகள்

மத்திய பாரதம் 46,478 சதுர மைல்கள் (120,380 km2) பரப்பளவு கொண்டிருந்தது.[4] இதன் குளிர்கால தலைநகரமாக குவாலியர் நகரம் மற்றும் கோடைக்கால தலைநகரமாக இந்தூர் நகரம் இருந்தது. இதன் தென்மேற்கில் பம்பாய் மாகாணம் (தற்கால குஜராத் & மகாராட்டிரா), வடமேற்கில் இராஜஸ்தான், வடக்கில் உத்தரப் பிரதேசம், கிழக்கில் விந்தியப் பிரதேசம் மற்றும் போபால் இராச்சியம் (1949–56), தென்கிழக்கில் மத்தியப் பிரதேசம் எல்லைகளாக இருந்தது. மத்திய பாரதப் பகுதி மக்களில் இந்தி மொழி பேசும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.

1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மத்தியப் பாரதப் பகுதிகளுடன், விந்தியப் பிரதேசம் ஆகியவைகள் புதிய மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

Remove ads

மத்திய பாரத மாவட்டங்கள்

1 நவம்பர் 1956-ஆம் தேதிக்கு முன்னர் மத்திய பாரதத்தில் 16 மாவட்டங்கள் இருந்தது.

  1. பிண்டு மாவட்டம்
  2. குவாலியர் மாவட்டம்
  3. முரைனா மாவட்டம்
  4. குனா மாவட்டம்‎
  5. சிவபுரி மாவட்டம்
  6. ராஜ்கர் மாவட்டம்
  7. விதிஷா மாவட்டம்
  8. சாஜாபூர் மாவட்டம்
  9. உஜ்ஜைன் மாவட்டம்
  10. இந்தூர் மாவட்டம்
  11. தேவாஸ் மாவட்டம்
  12. ரத்லாம் மாவட்டம்
  13. தார் மாவட்டம்
  14. ஜாபூவா மாவட்டம்
  15. கர்கோன் மாவட்டம்
  16. மண்டசௌர் மாவட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads