மன்செரா மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மன்செரா மாவட்டம்
Remove ads

மன்செரா மாவட்டம் (Mansehra District) (பஷ்தூ: مانسهره ولسوالۍ, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மன்செரா நகரம் ஆகும். இது கில்ஜித்-பாஸ்டிஸ்தான் பகுதிக்கு நுழைவாயில் ஆகும். மன்சேரா நகரத்தில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் மன்செரா மாவட்டம் ضلع مانسہرہ, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 15,55,742 ஆகும். அதில் ஆண்கள் 7,71,976 மற்றும் பெண்கள் 7,83,509 ஆக உள்ளனர். 90.69% மக்கள் கிராமப்புறங்களிலும்; 9.31% மக்கள் நகரப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்ட எழுத்தறிவு 62.56%. இசுலாமியர் அல்லாத மதச்சிறுபான்மை மக்கள் 427 பேர் உள்ளனர்.[1] இண்டிக்கோ மொழி 66.48%, பஷ்தூ மொழி 17.02% பேரும், கோகிஸ்தானி மொழி போன்ற பிற மொழிகளை 14.26% பேரும் பேசுகின்றனர்.[3]}}

Remove ads

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்

கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.[4]பாகிஸ்தான் தேசிய சட்ட சபைக்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

Thumb
மன்செரா மாவட்டத்தின் ஐந்து தாலுகாக்கள்
  • பாலாகோட் தாலுகா
  • மன்செரா தாலுகா
  • ஒகை தாலுகா
  • கால தாகா

இம்மாவட்டம் 59 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads