மம்தா சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மம்தா சர்மா (Mamta Sharma) என்பவர் ஓர் இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தபாங்கில் இருந்து "முன்னி பத்நாம் ஹுய்" மற்றும் யம்லா பக்லா தீவானாவின் "டிங்கு ஜியா" பாடலுக்காக அறியப்படுகிறார். இந்தப் பாடல்கள் தரவரிசையில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான (பெண்) பிலிம்பேர் விருது உட்படப் பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்குப் பெற்றுத் தந்தன.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சர்மா மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள பிர்லா நகரில் பிறந்தார். இவர் தனது படிப்பை மொரார் குவாலியரில் உள்ள புனித பால் பள்ளியில் முடித்தார். பள்ளியில், இவர் இசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பின்னர் இவர் தனது இசைக்குழுவுடன் பல்வேறு குடும்ப நிகழ்வுகளிலும் (திருமண வரவேற்புகள், விருந்துகள்) நிகழ்ச்சிகளை நடத்தினார்
தொழில்
பாலிவுட், பெங்காலி மொழிகளில் பாடுவதற்கு முன்பு, இவர் பல போச்புரி இசைத்தொகுப்புகளில் பாடியுள்ளார். இசை இயக்குநர் லலித் பண்டிட் இவரைத் தனது வெற்றிப் படமான தபாங்கில், முன்னி பத்நாம் ஹுய் என்ற பாடலி அறிமுகப்படுத்தினார். தபாங்கின் தெலுங்கு பதிப்பான கப்பார் சிங்கில் கெவ்வு கேகா என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார். பின்னர் இவர் பெவிகால் சே' & 'தூ' போன்ற வெற்றிப் பாடல்களை வழங்கினார்.
இசைத் தொகுப்பு
பாராட்டுகள்
- விருது
- 17ஆவது வருடாந்திர ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள், 2011 - கார்பன் மொபைல்ஸ் இசையில் சிறந்த புதிய திறமை சிறந்த பின்னணிப் பாடகி (பெண்)
- 6வது அப்சரா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விருதுகள், 2011 - சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) [3]
- 56வது பிலிம்பேர் விருதுகள், 2011 - சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) [4]
- 12வது பன்னாட்டு இந்தியத் திரைப்பட விருதுகள், டொராண்டோ, 2011 - சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) [5]
- மிர்ச்சி இசை விருதுகள், 2010 - ஆண்டின் வரவிருக்கும் பெண் பாடகி [6]
- மிர்ச்சி இசை விருதுகள், 2010 - ஆண்டின் சிறந்த பெண் பாடகி
- அப்சரா திரைப்படம் & தயாரிப்பாளர்கள் சங்க விருதுகள் 2013 - 93.5 ரெட் எப். எம். வானொலியில் மிகவும் பிரபலமான திரைப்படப் பாடலுக்கான விருது. "தபாங் 2" திரைப்படத்தின் "பெவிகால் எஸ்இ" பாடலுக்காக.
- விருதுப் பரிந்துரைகள்
- முதல் பிக் ஸ்டார் பொழுதுபோக்கு விருதுகள், 2010 - சிறந்த பின்னணிப் பாடகி (பெண்)
- ஜீ திரைப்பட விருதுகள், 2011 - சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) [7]
- ஸ்டார்டஸ்ட் விருதுகள், 2011 – புதிய இசை உணர்வு (பெண்)
- 2ஆவது தென்னிந்தியச் சர்வதேசத் திரைப்பட விருதுகள், 2013 - கப்பார் சிங்கின் "கெவ்வு கேகா" பாடலுக்காகச் சிறந்த பெண் பின்னணிப் பாடகி
- 2வது தென்னிந்தியச் சர்வதேசத் திரைப்பட விருதுகள், 2013 - யாரே கூகடலியில் இருந்து "123 மைக் டெஸ்டிங்" பாடலுக்காகச் சிறந்த பெண் பின்னணிப் பாடகி
Remove ads
மேலும் காண்க
- இந்திய பின்னணிப் பாடகர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads