மம்தா மோகன்தாஸ்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

மம்தா மோகன்தாஸ்
Remove ads

மம்தா மோகன்தாஸ் (Mamta Mohandas) 14 நவமபர் 1984 இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2006இல் தெலுங்கு படத்திற்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினையும், 2010இல் மலையாளப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார். இரண்டாவது துணை நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதினை 2010இல் பெற்றுள்ளார்.

விரைவான உண்மைகள் மம்தா மோகன்தாஸ், பிறப்பு ...
Remove ads

இளமைப் பருவம்

மம்தா மோகன்தாஸ் கேரள மாநிலம், கன்னூரை பூர்வீகமாகக் கொண்ட மலையாளக் குடும்பத்தில், அம்பாலபட் மோகன்தாஸ் - கங்காவிற்கு மகளாக நவம்பர் 14, 1984 இல் பிறந்தார். 2002 வரை பஹ்ரைனிலுள்ள இந்தியன் பள்ளியில் படித்தார். இவர் பெங்களூரில் உள்ள "மவுன்ட் கார்மல் கல்லூரி"யில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் ஐபிஎம், கல்யாண் கேந்திரா, மைசூர் மகராஜா மற்றும் ரேமண்ட்ஸ் நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.[3][4]

Remove ads

தொழில்

மம்தா, ஹரிகரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த "மயோக்கம்" என்கிற மலையாளைப் படத்தில் அறிமுகமானார். இப்படம் வெற்றி பெறாவிட்டாலும், மம்தா தான் ஏற்று நடித்த இந்திரா கதாபாத்திரத்தின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.[5] மலையாள நடிகர்களான மம்மூட்டியுடன் "பஸ் கண்டக்டர்(2005)", சுரேஷ் கோபியுடன் "அட்புதம்"(2006), ஜெயராம்முடன் "மதுசந்திரலேகா"(2006) போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கரு பழனியப்பன் இயக்கத்தில், நடிகர் விஷால் உடன் சேர்ந்து நடித்த "சிவப்பதிகாரம்" என்னும் படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.[சான்று தேவை]

2007இல் வெளிவந்த மலையாள வெற்றிப்படமான "பிக் பி" இல் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வந்த "யமதொங்கா" என்கிற படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்ததின் மூலம் தெலுங்குப் பட உலகிற்கு அறிமுகமானார். இத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. மம்தா இப் படத்திற்காக பாடல்களைப் பாடியுள்ளார். 2008இல் வெளிவந்த 7 தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். "கூலி"என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக கன்னட திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் "கிருஷ்ணார்ஜுனா", "விக்டரி" போன்ற கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப் படங்கள் வெற்றிகரமாக ஒடவில்லை. 2008இல் வெளிவந்த, ரஜினிகாந்த் நடித்த குசேலன் தமிழ்த் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் வெளியான மூன்று தெலுங்குத் திரைப்படங்களிலும் மம்தா நடித்துள்ளார். அதில் ஜெ டி சக்ரவர்த்தி இயக்கிய "ஹோமம்", ஸ்ரீனு வைட்லா இயக்கிய "கிங்" படங்களும் அடங்கும். இப் படங்களில் பின்னணிப் பாடகியாக பல பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடல்கள்

மம்தா பாராட்டப்படுகின்ற பாடகர்களில் ஒருவராக உள்ளார். இவர் கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசையைப் பயின்றவர். இவர் தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே, தேவி பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த "ராக்கி"(2006) தெலுங்குப் படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதில் பாடிய பாடலுக்காக, 2006ம் ஆண்டிற்கான சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.[6] இதைத் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

Remove ads

பிற வேலைகள்

2012இல் சூர்யா தொலைக்காட்சியில் "கையில் ஒரு கோடி" என்னும் வினாடி-வினா நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக செயல்பட்டார். பின்னர் அந் நிகழ்ச்சி கைவிடப்பட்டது..[7] "டி 4 டான்ஸ்" என்னும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார். 2013இல் நடந்த கேரள மட்டைப்பந்து அமைப்பிற்கு,(சிசிஎல்) நடிகை பாவனாவுடன் சேர்ந்து பிரதிநியாக இருந்தார். இதன் தலைவராக நடிகர் மோகன்லாலும், துணைத்தலைவராக இந்திரஜித் சுகுமாரனும் இருந்தனர். .

குடும்ப வாழ்க்கை

மம்தா பிரஜித் பத்மனாபன் என்கிற பஹ்ரைன் நாட்டுத் தொழிலதிபரை திசம்பர் 28, 2011இல் மணந்தார்..[8] ஆனால் திசம்பர் 22, 2012 இல் இத் தம்பதியினர் விவாகரத்திற்கு முறையிட்டனர்.[9]

மம்தா 2010 முதல் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்.[10] ஏப்ரல் 2013இல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.[11] தற்பொழுது லாஸ் ஏஞ்ஜல்ஸில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.[2]

விருதுகள்

  • கேரள மாநில அரசின் விருது
  • சிறந்த நடிகைக்கான விருது - "காத துடயுண்ணு".

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads