மலேசியாவில் கூட்டாட்சி

மலேசியாவில் ஓர் ஆட்சி முறை From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசியாவில் கூட்டாட்சி (ஆங்கிலம்: Federalism in Malaysia; மலாய்: Fahaman Persekutuan di Malaysia;) என்பது தீபகற்ப மலேசியாவில் மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு (Federated Malay States) தோன்றுவதற்கு முந்தைய ஓர் ஆட்சி முறையாகும். தீபகற்ப மலேசியா என்பது முந்தைய காலத்தில் மலாயா என அறியப்பட்டது.

சிங்கப்பூர், வடக்கு போர்னியோ (இப்போது சபா) மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் மலாயா இணைந்ததும் கூட்டாட்சி நிலைமை மேலும் சிக்கலானது.[1][2]

Remove ads

நடைமுறை ஒற்றையாட்சி

2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியா ஒரு நீதித்துறைக் கூட்டமைப்பாக இருந்தாலும், பலர் அதை ஒரு நடைமுறை ஒற்றையாட்சி நாடாக கருதுகின்றனர்.

2008-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி அடைந்தன. இந்த அரசியல் சூழல், மலேசியாவில் கூட்டாட்சியை நோக்கிய அணுகுமுறைகளை மாற்றலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.[3]

மாநில அரசுகள்

மாநில அரசாங்கங்கள் (Menteri Besar) எனும் முதலமைச்சர்களால் வழிநடத்தப் படுகின்றன. பரம்பரை ஆட்சியாளர்கள் இல்லாத மாநிலங்களில் கெத்துவா மந்திரி (Ketua Menteri) எனும் பதவிச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

மாநிலச் சுல்தான்கள் அல்லது ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றங்களால் (Dewan Undangan Negeri) முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

ஒற்றையாட்சி தோற்றம்

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடாக இருந்தாலும், அதன் "கூட்டாட்சி முறை மிகவும் மையப் படுத்தப்பட்டு இருப்பதாக" அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நடுவண் அரசாங்கத்திற்கு நிர்வாக அதிகாரங்களை மட்டும் அல்ல; மிக முக்கியமான வருவாய் ஆதாரங்களையும் வழங்குகிறது. வருமான வரி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் கலால் வரிகளின் வருவாயில் இருந்து மாநில அரசுகள் விலக்கப்பட்டு உள்ளன. மேலும் மாநில அரசுகள் அனைத்துலக அளவில் கடன் வாங்குவதில் இருந்தும் கட்டுப் படுத்தப்பட்டு உள்ளன. மாநில அரசுகளின் வருமானம் காடுகள், நிலங்கள், சுரங்கங்கள், பெட்ரோலியம், பொழுதுபோக்குத் தொழில் மூலமாகத்தான் கிடைக்கின்றன.[4]

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி; மக்கள் நீதிக் கட்சி; மற்றும் மலேசிய இஸ்லாமியக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் பதின்மூன்று மாநில சட்டமன்றங்களில் ஐந்தில் பெரும்பான்மையை வென்றன. இதற்கும் முன்னதாக, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி, கிளாந்தான் மாநிலத்தைத் தவிர, 12 மாநில அரசாங்கங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தது.[5]}}

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads