மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி

From Wikipedia, the free encyclopedia

மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி
Remove ads

மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி (மூடா) (ஆங்கிலம்: Malaysian United Democratic Alliance (MUDA); மலாய்: Ikatan Demokratik Malaysia; சீனம்: 马来西亚民主联合阵线) என்பது மலேசியாவில் இளைஞர்களை மையமாகக் கொண்ட பல்லின அரசியல் கட்சியாகும்.

விரைவான உண்மைகள் மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணிMalaysian United Democratic Alliance Ikatan Demokratik Malaysia, சுருக்கக்குறி ...
Thumb
மூடா கட்சியின் தலைவர் சையது சாதிக்; முன்னாள் மலேசிய இளைஞர்; விளையாட்டுத் துறை அமைச்சர்

இந்தக் கட்சி செப்டம்பர் 2020-இல் சையது சாதிக் (Syed Saddiq Syed Abdul Rahman) என்பவரால் உருவாக்கப்பட்டது.[1][2][3][4]

Remove ads

வரலாறு

உருவாக்கம்

மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி எனும் (மூடா) கட்சியை செப்டம்பர் 2020-இல் சையது சாதிக் உருவாக்கினார். இதற்கு முன்பு, இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) நிர்வாகத்தின் கீழ் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக (Minister of Youth and Sports) பணியாற்றினார்.

2018-ஆம் ஆண்டு சையது சதீக், அவரின் 25-ஆவது வயதில் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் இளைய மலேசிய அரசியல்வாதி எனும் சாதனையைப் படைத்தார்.[4]

மலேசிய அரசியல் நெருக்கடி 2020

சையது சதீக், மூவார் மக்களவை தொகுதியின் (Muar Federal Constituency) மக்களவை (மலேசியா)|நாடாளுமன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் முதலில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பெர்சத்து) (Malaysian United Indigenous Party) (BERSATU) உறுப்பினராக இருந்தார்.

மலேசியாவின் 14-வது மலேசியப் பொதுத் தேர்தலில் 50,843 வாக்காளர்களைக் கொண்ட மூவார் மக்களவை தொகுதியில் 6,953 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றவர் ஆகும். அதே தொகுதியில் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் 1,345 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

உள்நாட்டு போராளிகள் கட்சி

2020 பிப்ரவரி மாதம் மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022 அல்லது (செரட்டன் நகர்வு) (2020 Malaysian Political Crisis) எனும் நெருக்கடிக்குப் பின்னர் சையது சாதிக்கின் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் பதவி நிறுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சையது சாதிக்கும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.[5]

அதன் பின்னர் மகாதீர் பின் முகமது உள்நாட்டு போராளிகள் கட்சி மலாய்: Parti Pejuang Tanah Air; ஆங்கிலம்: Homeland Fighters' Party) (PEJUANG) கட்சியை உருவாக்கினார். ஆனால் சையது சாதிக்; மகாதீரின் புதிய கட்சியில் சேர மறுத்து விட்டார். 17 செப்டம்பர் 2020-இல், சையது சாதிக் தன் சொந்த புதிய கட்சியை பதிவு செய்ய மலேசிய சங்கங்கள் சட்டம் 1966-இன் (Societies Act 1966) கீழ் மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியிடம் (Registrar of Societies) (RoS) விண்ணப்பம் செய்தார்.[6][7][8][9]

2020 அரசியல் நெருக்கடி நேரத்தில், மலேசிய அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராடிக் கொண்டு இருந்தனர். அந்தக் கட்டத்தில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி மிகக் குறைந்த பெரும்பான்மையைப் பெற்று இருந்தது.

நிதியுதவி

தொடக்கக் காலத்தில் மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி (மூடா) தோன்றுவதற்கு நிதியுதவி செய்தவர்கள்:

  • சையது சாதிக் (Syed Saddiq)
  • அமீர் அப்துல் ஆடி (Amir Abd Hadi)
  • டாக்டர் தனுசா பிரான்சிஸ் சேவியர் (Dr. Tanussha Francis Xavier)
  • சரிசால் டென்சி (Sharizal Denci)
  • அபிகா சுல்கிப்லி (Afiqah Zulkifli)
  • லிம் வெய் தியெட் (Lim Wei Jiet)
  • லுக்மான் லாங் (Luqman Long)
  • ரட்சி தாஜுதீன் (Radzi Tajuddin)
  • தர்மிசி அனுவார் (Tarmizi Anuwar)
  • டாக்டர் மதன் முனீசுவரன் (Dr. Mathen Muniasupran)
  • முத்தலிப் உதுமான் (Mutalib Uthman)
  • சித்தி ரகாயூ பகாரின் (Siti Rahayu Baharin)
  • டாக்டர். தியோ லீ கென் (Dr. Teo Lee Ken)

பிரான்சு நாட்டின் லா ரிபப்ளிக் என் மார்ச்சே (La Republique En Marche) கட்சி; மற்றும் தாய்லாந்து நாட்டின் எதிர்கால முன்னோக்கு கட்சி (Future Forward Party) எனும் இரு அரசியல் கட்சிகளைப் போல மூடா கட்சி வடிவம் அமைக்கப் பட்டதாக சையத் சாதிக் கூறியுள்ளார்.[10]

அரசியல் கட்சியாக பதிவு

தன் கட்சி பல்லின இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்; மற்றும் இனம், மதம் அல்லது வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என சையத் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.[11][12]

மூடா கட்சியின் பதிவு மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து வழக்குகள் தொடரப் பட்டன. பற்பல போராட்டங்களுக்குப் பின்னர் இறுதியாக 23 டிசம்பர் 2021-இல் மூடா கட்சி மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads