சையது சாதிக்

மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சையது சாதிக்
Remove ads

சையது சாதிக் எனும் சையது சாதிக் சையது அப்துல் ரகுமான் (ஆங்கிலம்; மலாய்: Syed Saddiq எனும் Syed Saddiq Syed Abdul Rahman; சீனம்: 赛沙迪赛阿都拉曼; சாவி: سيد صادق‎); (பிறப்பு: 6 திசம்பர் 1992) என்பவர் 2018 மே மாதம் முதல் ஜொகூர், மூவார் மாவட்டம், மூவார் மக்களவைத் தொகுதியின் (Muar Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகுசையது சாதிக் YB Tuan Syed Saddiqநாடாளுமன்ற உறுப்பினர், மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ...

இவர் சூலை 2018 முதல் பிப்ரவரி 2020 வரை முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) அவர்களின் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) நிர்வாகத்தின் கீழ் மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக (Minister of Youth and Sports) பணியாற்றினார்.

2023-ஆம் ஆண்டில், நம்பிக்கை மீறல், நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்தல் போன்ற குற்றங்களுகாக அவர் குற்றவியல் விதிகளின் கீழ் தண்டிக்கப்பட்டார்.[1]

Remove ads

பொது

செப்டம்பர் 2020-இல் மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி எனும் (மூடா) (Malaysian United Democratic Alliance) (MUDA) கட்சியை உருவாக்கிய இவர், அதே கட்சியின் தலைவராக தற்போது வரையிலும் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் (பெர்சத்து) எனும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் (Malaysian United Indigenous Party) (BERSATU) தோற்றுநர்களில் ஒருவராகும்.

2016 செப்டம்பர் மாதம் தொடங்கி 2020 மே மாதம் வரையில், பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை அந்தக் கட்சியின் முதலாவது இளைஞர் தலைவராகப் பணியாற்றினார்.

Remove ads

வாழ்க்கை

1992 டிசம்பர் 6-ஆம் தேதி மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாருவில் உள்ள பூலாய் பகுதியில் சையது சாதிக் பிறந்தார். அவரின் தந்தை ஒரு சிங்கப்பூரியர்; ஒரு கட்டுமானத் தொழிலாளியாக சிங்கப்பூரில் பணிபுரிந்தார். சையது சாதிக்கின் தாயார் ஓர் ஆங்கில மொழி ஆசிரியர்.[2]

நான்கு உடன்பிறப்புகளில் இளையவர். அவர் அரச மலேசிய இராணுவக் கல்லூரியில் (Royal Military College Malaysia) (RMC) படித்தார். பின்னர் அவர் மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகத்தில் (International Islamic University Malaysia) (IIUM) இளங்கலைச் சட்டம் (LLB) படிப்பைத் தொடர்ந்தார்.

சிறப்பான பேச்சுத் திறமை

மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில், அவர் ஆசிய நாடுகள் அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஐக்கிய ஆசிய விவாத கோப்பையை (United Asian Debating Championship) வென்றார்.[3]

ஆசிய பிரித்தானிய நாடாளுமன்ற விவாத பேச்சுப் போட்டியில் (Asian British Parliamentary Debating Championship) (ABP) ஆசியாவின் சிறந்த பேச்சாளர் விருதை (Asia's Best Speaker Award) மூன்று முறை வென்ரார். அதன் பிறகு பேச்சாளர்கள் சமூகத்தில் பரவலாக அறியப்பட்டார். இவரின் மிகச் சிறப்பான பேச்சுத் திறமையால் தென்கிழக்காசியா, ஆசியா நாடுகளில் பிரபலம் அடைந்தார்.[4]

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

Thumb
மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா லக்தீருடன் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் சையது சாதிக்

ஏப்ரல் 2021-இல், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (National University of Singapore); சிங்கப்பூர் லீ குவான் யூ உயர்க்கல்வி அமைப்பில் (Lee Kuan Yew Senior Fellowship); லீ குவான் இயூ பொதுக் கொள்கை கல்வித் துறையில் (Lee Kuan Yew School of Public Policy) தன் உயர்க்கல்வியை முடித்தார்.[5][6][7]

குற்றச்சாட்டுகள்

2021-ஆம் ஆண்டில், நம்பிக்கை மீறல், நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்தல் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. அவர் குற்றங்களைச் செய்து இருக்கலாம் என்றும் அரசுத் தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது.[8][9]

அதைத் தொடர்ந்து, 2022 அக்டோபர் 28-ஆம் தேதி, அவர் தன் எதிர்வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[10][11]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads